இனி ஆண்களும் பெண்களை போல் குழந்தைக்கு தாய்பால் கொடுக்கலாம்...

பெண்கள் மட்டுமா குழந்தைக்கு தாய்பால் கொடுப்பார்கள்; இனி ஆண்களும் குழந்தைக்கு தாய்பால் கொடுக்க புத்துய முறை அறிமுகம்!!

Updated: Apr 14, 2019, 07:26 PM IST
இனி ஆண்களும் பெண்களை போல் குழந்தைக்கு தாய்பால் கொடுக்கலாம்...

பெண்கள் மட்டுமா குழந்தைக்கு தாய்பால் கொடுப்பார்கள்; இனி ஆண்களும் குழந்தைக்கு தாய்பால் கொடுக்க புத்துய முறை அறிமுகம்!!

இன்றைய உலகில் ஆணும் பெண்ணும் சரிசமம் என்ற சூழல் அனைத்து துறைகளிலும் நீருபித்து வருகின்றனர். குழந்தை பிறந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது பெண்களுக்கு மட்டுமே இயற்கை கொடுத்த வரம். ஆண்களால் தன் குழந்தைகளுக்கு தாய் பால் கொடுக்க முடியாது. இதனால் குழந்தைகள் பிறந்தால் தாய் குழந்தையை விட்டு சிறிது நேரம் கூட பிரிந்து செல்ல முடியாது. 

இந்நிலையில் இந்த பிரச்னையை போக்க ஆண்களே குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் கருவியை ஜாப்பான்நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அந்த கருவியில், பாலை கறந்து அடைத்து வைக்கும் பை போன்ற அமைப்பை கொண்டுள்ளது. மேலும், இந்த டேங்க் பெண்களின் மார்பு பகுதி போன்ற அமைப்பை பெற்றுள்ளது. இந்த கருவியை ஆண்கள் பொருத்தி கொண்டால் பெண்கள் எப்படி குழந்தைகளுக்கு பாலூட்டுகிறார்களோ, ஆண்களும் அவ்வாறே குழந்தைகளுக்கு பாலூட்ட முடியும். 

இந்த கருவியை தயாரித்த நிறுவனம் "இந்த கருவி தம்பதிகளின் வேலைப்பளூவை குறைப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பது பெண்களின் வேலை என்ற மனநிலையை மாற்றவே நங்கள் இந்த கருவியை வடிவமைத்துள்ளோம்" என கூறியுள்ளது. 

இந்த தாய்பால் கொடுக்கும் கருவியில் பெண்களின் மார்பு பகுதி போல சிலிக்கான நிப்பிள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் குழந்தை பால் குடிக்க முடியும். மேலும் பையில் நிரப்பும் பாலை சூடாக்கும் வசதியும் இந்த கருவியில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவியின் மனித உடலை போல சூடாக இருக்கும் அதனால் குழந்தைக்கு எப்போதும் தாய்பால் குடிப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தும். மேலும், இந்தகருவி ஸ்மார்ட்போன் ஆப் மூலமும் இயக்கலாம்.