Horoscope: சோம்பேறித்தனம் வாழ்க்கையை பாழாக்கிவிடும். சோம்பேறித்தனத்திற்கும் ராசிக்கும் உள்ள தொடர்ப்பு முக்கியமானது. இந்த ராசிக்காரர்கள் சோம்பேறித்தனமாக இருப்பார்கள். இது அவர்கள் வாழ்க்கையில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும்...
ஜோதிடத்தின்படி, மிகவும் சோம்பேறியாக இருப்பதற்கும் ராசிக்கும் தொடர்பு இருக்கிறது. இதுதான், அவர்களது வாழ்க்கையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கு காரணமாகிறது.
சோம்பேறித்தனம்தான் மனிதனின் மிகப்பெரிய எதிரி. சோம்பேறிகள் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் தோல்விகளை சந்திக்க வேண்டியிருக்கும். இன்றைய வேலையை நாளைக்கு ஒத்திபோடும் மனசஞ்சலத்தை ஏற்படுத்துவதும் ராசியின் இயல்புதான்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களின் (Zodiac Signs) குணம் சோம்பேறித்தனமாக இருக்கும். பெரும்பாலும் இவர்கள் இன்றைய வேலையை நாளைக்கு ஒத்திவைப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் எந்த ஒரு வேலையையும் சரியான நேரத்தில் செய்வதில்லை. எந்த ஒரு வேலையையும் அதிகம் தள்ளிப் போடுவது ஒரு பழக்கமாகிவிடும்.
ALSO READ | ஜனவரி 14 முதல் வக்கிரமாகும் புதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிக பிரச்சனை
மேலும், இவர்கள் தங்கள் திறமையை சரியான நேரத்தில் பயன்படுத்துவதில்லை. அவர்களது ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருப்பதால் இப்படி நடக்கிறது. எனவே மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய் தோஷ பரிகாரம் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமையன்று அனுமனை வழிபட்டால் சோம்பல் குணம் மாறும்.
விருச்சிகம்: இந்த ராசிக்காரர்கள் (Zodiac Signs) சுறுசுறுப்பும் தைரியமும் உடையவர்கள். ஆனால் சோம்பேறித்தனம் அவர்களிடம் நிறைந்திருக்கிறது. இதனால் அவர்கள் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அவர்கள் சில நேரங்களில் மிகவும் சோம்பேறியாகவும், தங்கள் சொந்த விஷயங்களில் கூட கவனக்குறைவாகவும் இருப்பார்கள். இதனால் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
விருச்சிக ராசியில் செவ்வாய் நீச்சமாக இருப்பதால் பிரச்சனைகள் ஏற்படும். விருச்சிக ராசியினரும் வாயுபுத்திரன் அனுமனை வணங்கி சுறுசுறுப்பைப் பெறலாம். செவ்வாய்கிழமை விரதம் இருப்பது வாழ்க்கையில் மேம்பாடு அடைய உதவியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஜீ மீடியாஅதை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | இந்த ராசிக்காரர்கள் டென்ஷனுக்கு டாடா சொல்லி கூலாக இருப்பவர்கள்: உங்க ராசியும் இதுவா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR