அனைத்து ராசிக்காரர்களும் அறிவார்ந்தவர்களே. ஆனால், இருக்கும் 12 ராசிக்காரர்களில் 5 ராசிகள் உடையோருக்கு மட்டும் IG எனப்படும் Intelligence quotient அதிகமாக இருக்குமாம். யார் அந்த அறிவார்ந்த ராசிக்கார்கள் என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
மிதுனம்-சட்டென பிடித்துக்கொள்ளும் புத்திசாலிகள்:
12 ராசிகளில் மூன்றாவது ராசிதான் மிதுனம். இவர்கள், கூர்மையான அறிவுத்திறன் பெற்றவர்களாக விளங்குவர். அதுமட்டுமன்றி, பிறரிடம் தெரியாததை கேட்டு தெரிந்து கொள்ளும் திறனும் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். இவர்கள், ஒரு துறை சார்ந்து இல்லாமல் பல துறைகளில் சிறந்து விளங்குவார்களாம். குறிப்பாக அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள், தத்துவ ஞானிகள் போன்றவர்களின் ஃபாலோவராக இவர்கள் இருப்பதால் இவர்கள் அறிவும் மேம்பட்டுக்கொண்டே இருக்குமாம். இந்த ராசிஉடைய பெரும்பாலானோருக்கு கணிதம் மிகவும் பிடித்த பாடமாக இருக்குமாம்.
மேலும் படிக்க | ‘இந்த’ 6 ராசிக்காரர்களுக்கு காதல் மழை பொழியப்போகிறது..! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?
கன்னி-பகுப்பாய்வதில் வல்லவர்கள்:
இடம், பொருள், ஏவல் பார்த்து பேசுவதிலும் செயல் படுவதிலும் வல்லவர்கள், கன்னி ராசிக்காரர்கள். ஒவ்வொரு நுட்பமான விஷயங்களுக்கும் இவர்கள் அதிக கவனம் கொடுப்பர், இவர்களது இந்த நுபமான கவனம் இவர்களுக்கு ஆபத்து காலங்களில் கை கொடுக்கும். இவர்களில் பலர் சிறந்த ஆராய்ச்சியாளர்களாக விளங்குவார்களாம். பிரச்சனையை கையாளும் திறன், சூழ்நிலையை ஆராயும் திறன் ஆகியவற்றால் இவர்கள் சிறந்து விளங்குவர்.
கும்பம்-தொலைநோக்கு பார்வை கொண்ட புத்திசாலிகள்:
12 ராசிகளில் பதினொன்றாவது ராசி, கும்பம். இந்த ராசி உடையோர், எந்த ஒரு சூழ்நிலையையும் சரியாக ஆராய்ந்து அதன் பின்விளைவுகளை தெரிந்து கொள்வதில் சிறந்தவர்களாக விளங்குவர். தனக்கு வேண்டிஅ விஷயங்களை யார் உதவியுமின்றி சுயமாக கற்றுக்கொள்வது இவர்களின் முக்கிய அறிவு கூர்மைகளுள் ஒன்று. யாராலும் கண்டுபிடிக்க முடியாத விஷயங்களை கூட எளிதில் இவர்களால் கண்டுகொள்ள முடியும். சமுதாயத்திற்கு தன்னால் முடிந்தவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும் என முயல்பவர்கள் இவர்கள். இவர்கள் பெரும்பாலும் மனநலம் தொடர்பான தொழில்களை தேர்ந்தெடுப்பர். சமூக அறிவு, தொழில்முறை படிப்புகள் இவர்களுக்கு மிகவும் பிடித்த பாடமாக இருக்குமாம். தங்கள் அறிவினை பெருக்க எப்போதும் முயற்சி செய்து கொண்டே இருப்பவர்கள் இவர்கள்.
விருச்சிகம்-உள்ளார்ந்த அறிவு கொண்டவர்கள்:
12 ராசிகளில் எட்டாவது ராசியாக விளங்குவது விருச்சிக ராசி. எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்த்து போராடக்கூடிய திறன் கொண்டவர்கள் இவர்கள். தெரியாத காட்டில் கண்ணை கட்டி விட்டால் கூட புத்திசாலித்தனமாக பிழைத்துக்கொள்ளும் திறன் இவர்களிடம் இருக்கிறதாம். ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் அதை உள்ளார்ந்து ஆராய்ந்து அதில் உள்ளவற்றை புட்டு புட்டு வைப்பதில் வல்லவர்கள். மிகவும் குழப்பமான ஒரு புதிரையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறன் இவர்களிடம் இருக்கிறதாம். இந்த ராசி உடையோர் பெரும்பாலும் ஆராய்ச்சி சார்ந்த படிப்புகளை விரும்புவர். சவாலான சூழ்நிலை விரும்பிகளாக இருக்கும் இவர்கள், அதற்குரிய வேலையத்தான் தேர்ந்தெடுப்பர். புகழ் பெற்ற பத்திரிகையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் பலர் விருச்சிக ராசி உடையோராக உள்ளார்கள்.
மகரம்-பல திறன் உடைய அறிவாளிகள்:
12 ராசிகளுல் 10ஆவது ராசியாக விளங்குவது, மகரம். இந்த ராசியுடையோர் தங்களுக்கென்று ஒரு கனவை வைத்துக்கொண்டு அதை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பர். இவர்கள், தங்கள் உள்ளுனர்வை மதித்து அதன்படி நடந்து புகழ்பெருபவர்களாக இருப்பர். இவர்களுக்கு தனித்திறமை என்ற ஒன்று இருப்பதை விட, பல திறமைகள் இருக்கும். பகுப்பாய்வதில் திறன் மிக்கவர்களாக இருபர். ஒரு விஷயத்தை சரியாக செய்வதற்கு மாஸ்டர் மைண்டாக திகழும் ராசிக்காரர்கள் இவர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு பணம் சம்பாதிக்க பல வழிகள் தெரிவதால் அதை சார்ந்த தொழிலைதான் தேர்ந்தெடுப்பர். இவர்கள், எதிர்காலத்திற்கு எது உதவும், எது உதவாது என்றும் கணித்து அதற்கேற்ப செய;படுவர். ஒரு பிரச்சனை வந்தால் அதை பற்றி யோசிக்காமல் அதிலிருந்து எப்படி வரவேண்டும் என்று யோசிப்பர்.
மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் - இந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் தேடி வரும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ