இந்த ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் கிடைக்கும் மட்டற்ற மகிழ்ச்சி, செல்வச்செழிப்பு!!

இந்த நிலையில் சில ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு மிக நல்ல பலன்களைத் தரும் என ஜோதிட சாஸ்திரத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 16, 2021, 07:11 PM IST
இந்த ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் கிடைக்கும் மட்டற்ற மகிழ்ச்சி, செல்வச்செழிப்பு!! title=

Horoscope 2022: 2021 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. புத்தாண்டு அதாவது 2022 ஆம் ஆண்டை வரவேற்பதற்கான ஆயத்தங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு தங்களுக்கு எப்படி இருக்கும் என்ற ஆர்வமும் அனைவருக்கும் உள்ளது. இந்த புத்தாண்டு தங்களுக்கு பல நல்ல செய்திகளை கொண்டு வர வேண்டும் என்ற ஆசையும் அனைவருக்கும் உள்ளது.

இந்த நிலையில் சில ராசிக்காரர்களுக்கு (Zodiac Signs) இந்த புத்தாண்டு மிக நல்ல பலன்களைத் தரும் என ஜோதிட சாஸ்திரத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு ராசி மீன ராசி!! மீன ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு பல வித நலன்களைத் தரும். 

ஆண்டின் தொடக்கத்தில், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளால் நீங்கள் சிரமப்படுவீர்கள். இதனால் மனம் கலங்கும். ஆனால், போகப்போக எல்லாம் சரியாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்கும். குரு பகவானின் அருளால் கணவன்-மனைவி இடையே உறவு நன்றாக இருக்கும். 

முக்கிய அம்சங்களில் மீன ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

ALSO READ | 2022-ல் குருவின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்கள் மீது வெற்றி மழை பொழியும்

மீன ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை: 

2022 ஆம் ஆண்டு மீன (Pisces) ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கைக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். அதே சமயம் காதலர்களின் காதல் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். காதல் துணையுடன் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். 

மீன ராசிக்காரர்களின் வேலை / வர்த்தகம் எப்படி இருக்கும்?

பணியில் இருப்பவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு வெற்றி நிறைந்ததாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். இத்துடன் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு புதிய வருமானம் கிடைக்கும். பண ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்பும் உள்ளது. புதிய வேலையைத் தொடங்க புத்தாண்டு சாதகமாக இருக்கும்.

மீன ராசிக்காரர்களின் நிதி நிலை எப்படி இருக்கும்?

2022 புத்தாண்டு, மீன ராசிக்காரர்களுக்கு 

சாதகமாக இருக்கும். சனி பகவானின் அருளால் சில நிரந்தர சொத்துக்களின் பலன் கிடைக்கக்கூடும். வருமானத்துடன் செலவுகளும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை மூலம் பண ஆதாயம் உண்டாகும். அதுமட்டுமின்றி, புதிய வேலைகளால் திடீர் பண ஆதாயமும் உண்டாகும்.

மீன ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை

மீன ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை புத்தாண்டில் சிறப்பாக இருக்கும். புத்தாண்டில் குடும்பத்தினரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். இதுமட்டுமின்றி சகோதர, சகோதரிகளுக்கும் புத்தாண்டு வெற்றிகரமானதாக அமையப் போகிறது. ஆண்டின் நடுப்பகுதியில் பெற்றோரிடம் அக்கறை காட்ட வேண்டி வரும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | 2022-ல் இவர்கள் மீது சனி பகவானின் அருள் உச்சத்தில் இருக்கும்

ALSO READ  | Horoscope 2022: புத்தாண்டு ஜோதிட பலன்கள்! எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News