விபத்திலிருந்து தந்தையின் உயிரை காப்பாற்றிய Apple கைக்கடிகாரம்..!

விபத்தில் இருந்து தந்தையின் உயிரை காப்பாற்ற ஆப்பிள் கைக்கடிகாரத்தின் அற்புதமான தொழில் நுட்பம் உதவியது குறித்து மகனின் நெகிழ்ச்சி பதிவு!!

Last Updated : Sep 25, 2019, 03:46 PM IST
விபத்திலிருந்து தந்தையின் உயிரை காப்பாற்றிய Apple கைக்கடிகாரம்..!

விபத்தில் இருந்து தந்தையின் உயிரை காப்பாற்ற ஆப்பிள் கைக்கடிகாரத்தின் அற்புதமான தொழில் நுட்பம் உதவியது குறித்து மகனின் நெகிழ்ச்சி பதிவு!!

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை சேர்ந்தவர் பாப் என்பவருக்கு கேப் பர்டெட் என்ற ஒரு மகன் இருந்துள்ளார். அண்மையில் இவர் தனது தந்தையின் வருகைக்காக வீட்டில் காத்திருந்தார். அப்போது பாப் அணிந்திருந்த ஆப்பிள் கைக்கடிகாரத்தில் இருந்து கேப் பர்டெடுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் பாப் அணிந்திருந்த ஆப்பிள் கைக்கடிகாரம் கீழே விழுந்துவிட்டது என்றும், அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்ற முழு விவரத்தையும் குறிப்பிட்டிருந்தது. 

இதன் மூலம் தனது தந்தை விபத்தில் சிக்கியிருக்கலாம் என்பதை உணர்ந்த பர்டெட், அவசர சிகிச்சை மையத்தை தொடர்பு கொண்டு விபத்து நடந்த இடத்தை தெரிவித்துள்ளார். அடுத்த ½ மணி நேரத்தில் மருத்துவமனை ஒன்றில் அவரது தந்தை இருக்கிறார் என்ற தகவலும் ஆப்பிள் கைக்கடிகாரம் மூலம் பர்டெட்டுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தனது தந்தையின் உயிரை காப்பாற்ற ஆப்பிள் கைக்கடிகாரத்தின் அற்புதமான தொழில் நுட்பம் உதவியது குறித்து கேப் பர்டெட் மகிழ்ச்சி தெரிவித்து முகநூளில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டார். அந்த பதிவை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம்குக் ‘லைக்’ செய்துள்ளார்.  

 

More Stories

Trending News