Zodiac: தொழிலில் கொடிகட்டி பறக்கப்போகும் ராசி..! வீடு, வாகன யோகமும் உண்டு..!

2022 ஆம் ஆண்டில் பண மழையில் நனைய காத்திருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகும் இருக்கிறதாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 14, 2023, 10:53 AM IST
Zodiac: தொழிலில் கொடிகட்டி பறக்கப்போகும் ராசி..! வீடு, வாகன யோகமும் உண்டு..! title=

காத்திருக்கும் யோகங்கள்

நம்பிக்கையுடன் புத்தாண்டை தொடங்கியிருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு, நல்ல விஷயங்கள் நிறைய காத்திருக்கின்றன. உங்களின் தனிப்பட்ட வளர்ச்சி அபரிவிதமாக இருக்கும். வருடத்தின் தொடக்கத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தாலும் சிறந்த வாய்ப்புகள் தேடி வரும். உழைப்புக்கான பலன் ஆண்டின் பிற்பகுதியில் கிடைக்கும். தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும்.

மேலும் படிக்க | சதயத்தில் சனி பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு இனி ராஜயோகம், மகிழ்ச்சி மழை

வருமானம்

பல வழிகளில் இருந்தும் பணம் வரவுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. உங்களின் நீண்ட நாள் கனவான வீடு மற்றும் வாகனம் வாங்கும் கனவு இந்த ஆண்டு நிறைவேறுவதற்கான சந்தர்பங்கள் உருவாகும். தொழில் தொடங்கும் எண்ணமிருந்தால் தாராளமாக தொடங்கலாம். வீட்டில் தொழிலில் ஈடுபடுவோர், வர்த்தகர்கள் மற்றும் விற்பனை நிர்வாகிகளுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக இருக்கும்

குடும்பம்

குடும்ப வாழ்க்கையைப் பொறுத்த வரை ஆண்டின் பிற்பகுதியில் மகிழ்ச்சி தாண்வடமாடும். அதற்கேற்ப சுப நிகழ்ச்சிகள் நடைபெறவும் வாய்ப்புகள் உள்ளன. இல்லற வாழ்க்கையில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.

வேலைவாய்ப்பு

நட்சத்திர பலாபலன்கள் அடிப்படையில் நீங்கள் நினைக்கும் வேலைகள் கைகூடும் ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். அதற்கு ஏற்ப திட்டமிட்டு செயல்படுங்கள். உங்களை நீங்கள் வளர்த்துக்கொள்ளும்பட்சத்தில் வேலை வாய்ப்பு நிச்சயம் தவறவிடமாட்டீர்கள். உங்கள் திறமையை பயன்படுத்திக்கொள்ள நிறைய பேர் காத்திருக்கிறார்கள்.

உடல்நலம்

மகிழ்ச்சியும், அமைதியும் உங்களிடத்தில் இருக்கும். யோகா, தியானத்தில் கவனம் செலுத்துங்கள். இவை உங்களின் மன ஆரோக்கியம் மேம்படுவதற்கு உதவியாக இருக்கும். வயதான பெற்றோர்கள் இருந்தால், கொஞ்சம் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும்.

மேலும் படிக்க | Surya Gochar: பண நஷ்டத்தை தவிர்க்கவும்! பங்குனி மாத ராசி பலன் எச்சரிக்கை

காதல் வாழ்க்கை

வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்டாக இருப்பதால், இந்த ஆண்டு உங்களின் காதல் வாழ்க்கை உரசலாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.  முக்கியத்துவம் எதற்கு கொடுப்பது என்பதில் இருவருக்கும் இடையே மனக்கசப்பு உருவாகலாம். ஆண்டின் பிற்பகுதியில் இது சரியாகிவிடும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News