Surya Gochar: பண நஷ்டத்தை தவிர்க்கவும்! பங்குனி மாத ராசி பலன் எச்சரிக்கை

Sun Transit In Pisces 15 March 2023: பங்குனி மாதப் பிறப்பை உருவாக்க மீன ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன், குரு பகவானின் அருளையும் மீறி சில நஷ்டங்களை ஏற்படுத்துவார். பங்குனி மாத ராசி பலன் எச்சரிக்கை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 14, 2023, 09:09 AM IST
  • பண நஷ்டத்தைக் கொடுக்கும் சூரியன்
  • பங்குனி மாத ராசி பலன்
  • வார்த்தைகளி கவனம் இருந்தால் வாழ்வில் நிம்மதி நிச்சயம்
Surya Gochar: பண நஷ்டத்தை தவிர்க்கவும்! பங்குனி மாத ராசி பலன் எச்சரிக்கை title=

சூரிய பெயர்ச்சி 2023: கிரக மாற்றங்கள் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், சூரியனின் ராசி பெயர்ச்சியின் அடிப்படையில் தான் தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. தற்போது, இந்த மார்ச் மாதம் 15ம் தேதியன்று சூரியன் ராசி மாறுவதால் பங்குனி மாதம் பிறக்கிறது. பங்குனி மாதப் பிறப்பை உருவாக்க மீன ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன், குரு பகவானின் ராசியான மீன ராசியில் சஞ்சரிக்கப் போகிறார்.

சூரியனுக்கும் குருவுக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது என்பதால், கெடுபலன்கள் அதிகமாக இருக்காது என்றாலும், சூரியனின் சஞ்சாரம் 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சங்கடங்களை ஏற்படுத்தும். கொண்டுவரும். இக்காலகட்டத்தில்  வேலை, தொழில் ஆரோக்கியம் என பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள், ராசி பலனை தெரிந்துக் கொண்டு எச்சரிக்கையாக இருக்கலாம்

மார்ச் 15 சூரியப் பெயர்ச்சி

மேஷம்

மாணவர்களின் நம்பிக்கைக் குறையும், அதுவும் பொதுத்தேர்வுகள் நடைபெறும் இந்த சமயத்தில் அவநம்பிக்கை, மிகப் பெரிய பிரச்சனையாக மாறிவிடும்.  உடல்நலக்குறைவு மற்றும் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மீன ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்வதால் ஆற்றல் மற்றும் உற்சாகம் சற்று குறையலாம். மேலும், உங்கள் எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாகவே பேசுவது நல்லது.

பரிகாரம் - காயத்ரி மந்திரத்தை ஜபிக்கவும்

மேலும் படிக்க | Astro Traits: பணத்தை தண்ணீர் போல செலவு செய்யும் ‘சில’ ராசிகள்!

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு தந்தையின் ஆதரவு கிடைக்கும் என்றாலும், அவருக்கு சில உடல்நலப் பிரச்சினைகளால் பாதிப்பு ஏற்படலாம். தந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். அதைத் தவிர, அப்பாவுடன் பேசும்போது சில ஈகோ மோதல்களையும் சந்திக்க நேரிடும்.

பணியிடத்தில் போட்டியாளர்கள் மற்றும் எதிரிகளை தைரியமாக சமாளித்தால் வெற்றி கிடைக்கும். மூத்த சகோதரர்களிடம் கவனமாக நடந்துக் கொள்ளவும்..

பரிகாரம் - வீட்டை விட்டு வெளியேறும் முன் உங்கள் தந்தையை மதித்து அவருடைய ஆசிகளைப் பெறுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரகளுக்கு பங்குனி மாதத்தை உருவாக்கும் சூரியனின் பெயர்ச்சி கலவையான பலன்களைத் தரும்.உடல் ஆரோக்கியத்தில் குறித்து சற்று விழிப்புடன் இருக்க வேண்டும், கண்பார்வை, இதயம் மற்றும் எலும்புகள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட்டால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகவும். மாமியார் மருமகளுக்குள் பிரச்சனைகள் வரலாம். எனவே பேசும்போது கவனமாக இருக்கவும். 

பரிகாரம்-  சிவ வழிபாடு பலன் தரும்

மேலும் படிக்க | Mars Transit: செவ்வாய் பெயர்ச்சியால் சிக்கலில் சிக்கப் போகும் ராசிகள்! எச்சரிக்கை

துலாம்
புதிய முதலீடுகள் அல்லது ஊக வணிகள் செய்பவர்களுக்கு எச்சரிக்க அதிகம் தேவை. இந்த சூரியப் பெயர்ச்சி, உங்களுக்கு திடீர் பண நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால், கவனமாக இருக்கவும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம், அதிலும் குறிப்பாக மருத்துவச் செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். இந்தகாலகட்டத்தில் செய்யும் செயல்கள் எதிர்காலத்தில் உங்களைச் சிக்கலில் ஆழ்த்தக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்,  

பரிகாரம் - குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் பூஜை செய்யவும்.  

மேலும் படிக்க | Astro: ‘இவற்றை’ செய்தால் வாழ்க்கையில் என்றென்றும் சுக்கிர திசை தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News