கல்வி தரத்தில் வளர்ந்து வரும் இந்திய பல்கலை., கழகங்கள்...

உலகளவில் சிறந்த பல்கலைக் கழகங்களுக்கான தரவரிசை பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த 49 பல்கலைக் கழகங்கள் இடம் பிடித்துள்ளன!

Last Updated : Jan 17, 2019, 09:34 AM IST
கல்வி தரத்தில் வளர்ந்து வரும் இந்திய பல்கலை., கழகங்கள்... title=

உலகளவில் சிறந்த பல்கலைக் கழகங்களுக்கான தரவரிசை பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த 49 பல்கலைக் கழகங்கள் இடம் பிடித்துள்ளன!

லண்டனில் உள்ள, Times Higher Education Emerging Economies சர்வதேச நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள 43 நாடுகளைச் சேர்ந்த, 450 பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. 

ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டியலில் இந்த ஆண்டிற்கான பட்டியலில், மிகச் சிறந்த, 200 பல்கலைக் கழகங்கள் வரிசையில், சீன பல்கலைக்கழகங்கள், முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளன. மேலும் இந்தியாவை சேர்ந்த, 25 பல்கலைக் கழகங்களும் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

தற்போது வெளியாகியுள்ள இப்பட்டியலில் பெங்களூரு இந்திய அறிவியல் கழகம், 14-வது இடத்திலும் மும்பை, ஐ.ஐ.டி., 27-வது இடத்திலும் உள்ளது. மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில் உள்ள, ஐ.ஐ.டி., 61-வது இடத்திலும், 'ஜே.எஸ்.எஸ்., அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன் அண்டு ரிசர்ச்' நிறுவனம், 64-வது இடத்திலும், ரூர்க்கி, ஐ.ஐ.டி., 35-வது இடத்திலும் உள்ளது.

இதுகுறித்து, 'Times Higher Education Emerging Economies' நிறுவனத்தைச் சேர்ந்த, எல்லி போத்வெல் தெரிவிக்கையில் இந்திய நிறுவனங்கள், வளர்ந்து வரும் நிலையில் மட்டுமல்லாமல், உலகளவில் வெற்றிக்கான மகத்தான ஆற்றலை பெற்று உள்ளன. இந்த ஆண்டிற்கான பட்டியலில், இந்திய நிறுவனங்கள் கற்பித்தலில் திறம்பட செயல்பட்டு உள்ளன. ஆனால், சர்வதேச கண்ணோட்டத்தின் அடிப்படையில், உலகளாவிய சராசரிக்கு பின்னால் உள்ளன.

இதை வலுப்படுத்துவதன் மூலம், உயர் கல்விக்கான நாட்டின் நற்பெயரை உலகளவில் மேலும் உயர்த்த முடியும். மேலும், முக்கிய ஆராய்ச்சி ஒத்துழைப்பை ஊக்குவிப்பதுடன், சர்வதேச மாணவர்களை ஈர்க்கவும் உதவும் என்று தெரிவித்துள்ளார்.

Trending News