TTD: உதய அஸ்தமன சேவைக்கு 531 டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு! விலை ரூ.1.50 கோடி

திருப்பதியில் ஏழுமலையானை நாள் முழுவதும் தரிசிக்க 1.50 கோடி கட்டணம் வசூலிக்கப்படும் உதய அஸ்தமன சேவையின் 531 டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 21, 2021, 10:13 AM IST
  • திருப்பதி உதய அஸ்தமன சேவைக்கு 531 டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு
  • வெள்ளிக்கிழமை தரிசனத்திற்கு ரூ.1.50 கோடி
  • பிற நாட்களில் உதய அஸ்தமன சேவைக்கு ஒரு கோடி கட்டணம்
TTD: உதய அஸ்தமன சேவைக்கு 531 டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு! விலை ரூ.1.50 கோடி title=

திருப்பதி: திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க  உதய அஸ்தமன =சேவைக்கான 531 டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. ஆண்டுக்கு ஒரு நாள் முழுவதும் தரிசனம் செய்ய ரூ.1.50 கோடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உதய அஸ்தமன சேவைக்கான கட்டணம் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்துகிறது. வெங்கடாசலபதியை 25 ஆண்டுகளுக்கு தரிசிக்க இந்த டிக்கெட் வாங்கினால் போதும். 

இந்த டிக்கெட் வாங்கியவர்கள் வெள்ளிக்கிழமையன்று தரிசிக்க விரும்பினால், 1.50 கோடி ரூபாயும், பிற நாட்களில் தரிசிக்க 1 கோடி ரூபாயும் கட்டணம் நிர்ணயித்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் (Tirupati Devastanam) தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக 531 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. 

டிடிடி

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில், சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை,  கல்யாண உற்சவம் முதல் இரவு நடத்தப்படும் ஏகாந்த சேவை வரை பல்வேறு உற்சவங்கள் தினந்தோறும் நடைபெறுகின்றன.

இந்த பூஜைகள் அனைத்தையும் ஒரு நாள் முழுவதும் கோயிலில் இருந்தே பக்தர்கள் தரிசனம் செய்யும் விதமாக, ‘உதய அஸ்தமன சேவை’ எனும் சேவை செயல்படுத்தப்பட உள்ளது.

ALSO READ | திருப்பதியில் முடி தானம் செய்யும் வழக்கம் எப்படி தொடங்கியது

இந்த சேவையின் பொருள், அதிகாலை சுப்ரபாத தரிசனம் தொடங்கி, இரவு, ஆலயம் மூடும் வரையிலான அனைத்து சேவைகளையும் ஒருவர் பார்ப்பதாகும். பொதுவாக, இந்த வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது.

இந்த புதிய சேவையின்  மூலம், காலை முதல் இரவு வரையிலான பூஜைகள் அனைத்திலும் ஒருவர்  பங்கேற்கலாம். அதுவும் 25 ஆண்டுகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். தேவஸ்தானத்தின் இந்த சிறப்பு திட்டத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

உதய அஸ்தமன சேவையில் பங்கேற்க சாதாரண நாட்களில் ரூ.1 கோடியும், வெள்ளிக் கிழமைகளில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுவதால் அன்று மட்டும் ரூ.1.50 கோடி என தேவஸ்தானம் நிர்ணயித்துள்ளது.

இந்த கட்டணத்தைக் கட்டும் பக்தர்கள், தங்களுக்கு உகந்த நாளை தேர்வு செய்து ஆண்டிற்கு ஒரு நாள் என 25 ஆண்டுகளுக்கு உதய அஸ்தமன சேவையில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட உள்ளது.

ALSO READ | பணக்காரர் ஆக வேண்டுமா? கனவை நனவாக்க, கண்டிப்பாக இதை செய்யுங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News