இன்றைய (14-07-2018) முக்கிய செய்திகள் ஒரு பார்வை!!

இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!

Written by - Devaki J | Last Updated : Jul 14, 2018, 03:06 PM IST
இன்றைய (14-07-2018) முக்கிய செய்திகள் ஒரு பார்வை!! title=

இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!

 

> மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் -வானிலை மையம் எச்சரிக்கை!

கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது!

> நாட்டின் 3-வது திருநங்கை நீதிபதியாக சுவாதி பிதான் ராய்!!

நாட்டின் மூன்றாவது திருநங்கை நீதிபதியாக சுவாதி பிதான் ராய் அசாம் மாநிலத்தில் இன்று பதவியேற்றார்! 

> கபினி அணையிலிருந்து 45,000 கன அடி நீர் வெளியேற்றம்!!

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன!!

> திருப்பதியில் ஆக.,9 முதல் பக்தர்கள் செல்ல தடை!!

திருப்பதியில் ஆக.9 முதல் 17 ஆம் தேதி வரை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பக்தர்களுக்கு தடை!! 

> பாராளுமன்ற மாநிலங்களவைக்கு 4 எம்.பி-க்கள் நியமனம் -ராம்நாத் கோவிந்த்

பாராளுமன்றத்தின் மேல் சபைக்கு புதிய நான்கு எம்.பி.,க்களை நியமித்து உத்தரவிட்டார் குடியரசு தலைவர்.

> கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் முகமது கைஃப்!

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்!

> பேரவையில் MLA-களை ஏற்க மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு -கிரண்பேடி

புதுவை MLA-களை பேரவையில் அனுமதிக்கவில்லை என்றால் புதுச்சேரி அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என கிரண்பேடி அதிரடி!

> INDvsENG: 2_வது ஒருநாள் போட்டி வெற்றி பெற்று தொடரை வெல்லுமா இந்தியா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று லண்டன் லாட்ச் மைதானத்தில் நடைப்பெறுகிறது.

> ஸ்ரீ ரெட்டிக்கு மிரட்டல் விடுக்கும் விஷால்.. பின்னணி என்ன?

தமிழ் நடிகர் விஷால் ரெட்டி தன்னை மிரட்டுவதாக தமிழ் லீக்ஸ் புகழ் ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.

> உ.பி-யில் இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார் மோடி!!

நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு பிரச்சாரம் செய்ய உள்ளார். 
 
> இருக்கை தகராறு: மாணவர் பிளேடால் தாக்கப்பட்ட கொடூரம்!

வகுப்பறையில் உள்ள இருக்கைக்கு இரு கும்பலுக்கு இடையே ஏற்பட்ட தகராறால் மாணவரை முதுகில் பிளேடால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 

> FIFA உலக்கோப்பை 3வது இடம் யாருக்கு? இன்று இங்கிலாந்து v பெல்ஜியம் மோதல்

ரஷ்யாவில் நடைப்பெற்று வரும் ஃபிபா உலக்கோப்பை கால்பந்து தொடரின் 3_வது இடத்திற்கான போட்டி இன்று நடக்க உள்ளது. 

> மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்றிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவாகியுள்ளது!! 

> நீர் வரத்து அதிகரிப்பு.. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை நெருங்கியது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 46,000 கனஅடியில் இருந்து 47,500 கன அடியாக அதிகரித்துள்ளது. 

> முருகதாஸ், ஸ்ரீகாந்த் அடுத்து லாரன்ஸ்.. தொடரும் ஸ்ரீரெட்டியின் தமிழ் லீக்ஸ்

தெலுங்கு திரையுலகில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்களின் பட்டியலை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ஸ்ரீ ரெட்டி, தற்போது தமிழ் திரைதுறையை சார்ந்தவர்களின் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு அவர்களின் முகத்திரையை கிழித்து வருகிறார். 

> விம்பிள்டன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற கெவின் ஆண்டர்சன்

லண்டனில் நடைப்பெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் கெவின் ஆண்டர்சன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

> பாகிஸ்தான் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் பலி 133 ஆக உயர்வு

பாகிஸ்தானில் இரண்டு குண்டு வெடிப்பில் இதுவரை பலி எண்ணிக்கை 133 ஆகா உயர்ந்துள்ளது.

> தியேட்டர்களுக்கு உணவு பொருட்களை கொண்டு செல்லலாம் -மஹாராஷ்டிரா அரசு

மஹாராஷ்டிராவில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் உட்பட அனைத்து தியேட்டர்க்கு படம் பார்க்க வருபவர்கள் இனி வெளியில் இருந்து சாப்பிடும் உணவு பொருட்களை கொண்டு வரலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

> ஊழல் வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது!

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் லாகூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்!

> ZEE5-ல் சன்னிலியோன் வாழ்கை வரலாறு; சன்னியின் புதிய Video!

பாலிவுட் பிரபலம் சன்னிலியோன் வாழ்க்கை வரலாற்றினை ZEE5 இணைய பக்கத்தில் ஜூலை 16-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ள நிலையில் இத்தொடரை விளம்பரப்படுத்தி சன்னிலியோன் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார்!

 

Trending News