இன்றைய (29-06-2018) முக்கிய செய்திகள் ஒரு பார்வை!!

இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 29, 2018, 02:10 PM IST
இன்றைய (29-06-2018) முக்கிய செய்திகள் ஒரு பார்வை!! title=

இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!

> 1 வருடத்திற்கு பின்.. நல்ல காற்றை சுவாசித்த டெல்லி வாசிகள்

டெல்லியில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் காற்றில் கலந்திருந்த மாசுகள் சுத்தம் ஆகியுள்ளன. 

> தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் போலீசார் இன்று ரத்த தானம்!

தமிழகம் முழுவதும் காவலர்களின் ரத்த தான முகாம்: 20,000 காவலர்கள் பங்கேற்பு. சென்னையில் 3000 போலீசார் செய்து வருகின்றனர். 

> கமல்ஹாசன் வணக்கம் டிவிட்டர் நேரலை உரையாடல் பதிவு இதோ! வீடியோ!\

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் டிவிட்டர் நேரலையில் மக்களை சந்தித்து பேசியுள்ளார்! 

> இமாச்சல பிரதேசம்: மணாலி-லே நெடுஞ்சாலையில் நிலச்சரிவு! போக்குவரத்து துண்டிப்பு!

தொடர் கனமழை மழை காரணத்தால் இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மணாலி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

> அடுத்த 3 நாட்களில் இந்தியா முழுவதும் மழை! வானிலை அறிக்கை!

வடஇந்தியா நோக்கி வந்துள்ள தென்மேற்கு பருவமழை அடுத்த 2 அல்லது 3 நாட்களில் நாடு முழுவதும் மழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது!

> அதிர்ச்சி! மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பங்களாவில் தீவிபத்து!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தங்கி ஓய்வெடுத்த சிறுதாவூர் பங்களா வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ சுமார் 5 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு அணைக்கப்பட்டது.

> காதலருடன் ஆகாஷ் அம்பானி நிச்சயதார்த்த விழாவில் பாலிவுட் அழகி!

முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது காதலர் நிக் ஜோனாஸுடன் கலந்துக் கொண்டார்.

> ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழா: பிரபலங்கள் பங்கேற்பு!

முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

> FIFA 2018: 2-1 என்ற கோல் கணக்கில் பனாமாவை வென்ற துனிசியா!

உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் பனாமா அணியை 2-1 என்ற கோல்கணக்கில் துனிசியா வீழ்த்தியது! 

> நயன்தாரா நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தின் சென்சார் வெளியீடு!

கோலமாவு கோகிலா படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட தணிக்கைக் குழு சோதனைக்கு அனுப்பப்பட்ட இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 

> FIFA World Cup 2018: இங்கிலாந்தை வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி!  

உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வீழ்த்தியது!

> 29-06-2018: இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை!

Trending News