டிசம்பர் 11 ஆம் தேதி முதல் ஷிம்லா - கல்கா இடையே இயங்கும் ரயில்களின் கண்ணாடியால் மூடிய மேற்கூரைகள்....
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள சிம்லாவிலிருந்து, அரியானா மாநிலம் கல்கா இடையே 96 கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்கப்படும் மலை ரயில், யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மலைப்பிரதேசத்தின் அழகை ரசிக்க வசதியாக மேற்கூரையில் கண்ணாடி பொருத்தப்பட்ட ரயில் பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் பெட்டி வரும் செவ்வாய்க்கிழமை முதல், மலைரயிலில் இணைக்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை வடக்கு ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டது. கல்கா - சிம்லா ரயில் வடக்கு ரயில்வேயின் அம்பாலா கோட்டத்தின் கீழ் வருகிறது. இது யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பெட்டிகள் சேர்க்கப்பட்ட ரயில் நேற்று சோதனை ஓட்டத்திற்கு விடப்பட்டது.
டிசம்பர் 11 ம் தேதி முதல் ரயில்வே பயணிகள் ரயில் பயணிகள் சிம்லா-கல்கா பாதையின் சரியான கண்ணோட்டத்தை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பெட்டிகளில் கட்டணங்களும் வயது வந்தவர்களுக்கு ரூ 130 மற்றும் குழந்தைகள் ரூ 75 ஆகும். இந்த சிறப்பு ரயில் பெட்டியில் ஒரே நேரத்தில் 36 பேர் பயணிக்க முடியும்.
Prince Sethi, Station Superintendent, Shimla Railway station: Indian Railways has decided to introduce vistadome coach on regular basis from December 11 on the Shimla-Kalka route. Fares would be Rs 130 for adults and Rs 75 for children. pic.twitter.com/YhG82v9uOW
— ANI (@ANI) December 9, 2018
இந்த புதிய முறை குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், புதிய பெட்டியால் பயணிகள் புதுமையான அனுபவத்தைப் பெறுவர். மேற்புற கண்ணாடி கூரை மூலம் இயற்கை அழகைக் கண்டு ரசிக்கலாம். இந்தப் பெட்டியில் 36 பேர் அமர்ந்து செல்லலாம். மேலும் குஷன் கொண்ட மரத்தால் ஆன உட்புற உபகரணங்கள், LED விளக்குகள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பெட்டியால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த ரயில் மணிக்கு 25 km வேகத்தில் செல்லும்.
மேலும், ரயில் பேட்டி முழுவதும் AC மயமாக்கப்பட்ட விஸ்டாடோமே DC-15 ரயில் பெட்டி நிஹார் என்று அழைக்கப்படுகிறது. இதுபோன்ற வசதி இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது என்றார்.