ஒரே நபரின் இரட்டை குழந்தையை ஒரே நேரத்தில் வேறு வேறு பெண்கள் பெற்றெடுத்த அதிசய சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது...!
இன்றைய காலகட்டத்தில் குழந்தை பிறப்பு என்பது ஒரு வரமாகிவிட்டது. பல இளம் தம்பதிகள் குழந்தையில்லாமல் தவித்து வருகின்றனர். அதே நேரத்தில் மக்கள் மத்தியில் செயற்கை கருவூட்டலும் அறிவியல் ரீதியில் சுலபமாகியுள்ளது. அமெரிக்காவின் மின்னசோட்டா பகுதியை சேர்ந்த கேல் பையர்சி (Kelsi Piece) தம்பதி திருமணமாகி குழந்தையில்லாமல் தவித்து வந்துள்ளனர்.
இதை தொடர்ந்து, மருத்துவ பரிசோதையின் போது கெல்சியின் கருப்பையில் குழந்தையை தாங்கும் தன்மையில்லை என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், லீசி தனது மகளுக்காக தாய் கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொடுத்த (Twin sisters) செய்தியை படித்து தானும் தனது மகளுக்காக குழந்தையை சுமக்க முடிவு செய்து அதை தனது மகளிடம் கூறியுள்ளார்.
ALSO READ | போனில் இருந்த ஆபாச படங்களை அழித்த பெற்றோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த மகன்!!
அதன் பேரில் தாயும் மகளும் டாக்டரிடம் சென்று தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை டாக்டர்கள் செய்தனர். இதனால் மகள் கெல்சியின் குழந்தை அவரின் 51 வயதான தாய் லீசியின் கருவில் உருவானது. இந்த கரு உருவான சில நாட்களிலேயே கெல்சியும் கருவுற்றார். டாக்டர்களுக்கு இதுபெரும் ஆச்சரியமாக இருந்தது. இதையடுத்து, ஒரே நேரத்தில் தாயும், மகளும் இரட்டை குழந்தைகளை கருவுற்றிருந்தனர். இவர்கள் இருவரும் கடந்த மார்ச் மாதம் கருவுற்ற நிலையில் தற்போது இவர்கள் இருவருக்கும் குழந்தை பிறந்துள்ளது.
இருவரும் அழகான பெண் குழந்தையை பெற்றுக்கொடுத்தனர். ஆவே ரே, மற்றும் எவர்லி ரோஸ் என இரு குழுந்தைகளுக்கு தற்போது பெயர் வைத்துள்ளனர். ஒரே நபரின் இரட்டை குழந்தையை ஒரே நேரத்தில் வேறு வேறு பெண்கள் பெற்றெடுத்த சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR