நீங்கள் யாரை திருமணம் செய்ய போகிறீர்கள்? Google கூறும் ஜோதிடம்!

சமூக ஊடகங்கள் எப்போதும் ஒரு சில வேடிக்கையான போக்குகளுடன் வருகின்றன. அந்த வகையில் தற்போது ‘உங்கள் துணைவர் யாராக இருப்பார்? எனும் கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Updated: Aug 31, 2019, 07:30 PM IST
நீங்கள் யாரை திருமணம் செய்ய போகிறீர்கள்? Google கூறும் ஜோதிடம்!
Screengrab

சமூக ஊடகங்கள் எப்போதும் ஒரு சில வேடிக்கையான போக்குகளுடன் வருகின்றன. அந்த வகையில் தற்போது ‘உங்கள் துணைவர் யாராக இருப்பார்? எனும் கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தேடல் ஜம்பவனானா Google-ல் உங்கள் விசைபலைகையினை கொண்டு 'I am marrying...' என்று தட்டச்சு செய்து, பின்னர் தானாக திருத்தம் செய்யும் அடுத்த வார்த்தையை கூகிள் வெளிப்படுத்துகிறது. மேலும், அவர்களின் தேடுபொறி நினைவகத்தில் இருக்கும் தகவல்களை கொண்டு மற்றவருக்கு எதைக் காண்பிக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்கிறது. 

இந்த தானாக திருத்தம் செய்யப்பட்ட பதில்கள் வேடிக்கைகள் நிறைந்ததாகவும், சுவாரசியமானதாகவும் உள்ளது. இந்த பதில்களை பயனர்கள் பலரும் ட்விட்டர், சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

சில நாட்களுக்கு முன்பு, ஒரு நபரின் எண்ணில் இருந்து மற்றொரு நபருக்க செய்தி அனுப்பும் போது சுவாரஸ்யமான சில விஷயங்கள் வெளிப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. அதாவது உங்களுடைய கடைசி அல்லது அடுத்த எண்ணாக இருக்கும் ஒரு நபருக்கு செய்தி அனுப்பும் போது., விசைப்பலகை வழங்கிய தானியங்கு சரியான பரிந்துரைகள் "ஒரு குழந்தை, மின்னஞ்சல், சாத்தான் வரை, மக்கள் என சில பெருங்களிப்புடைய பதில்களைப் பெற்றுள்ளனர்". அந்த வரிசையில் தற்போது  'I am marrying...' ட்ரண்ட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.