கருவளையத்தை கட்டுப்படுத்த தக்காளி போதும்..‘இப்படி’ பயன்படுத்துங்கள்!

5 Ways To Control Dark Circles : கருவளையத்தையும், முகத்தில் ஆங்காங்கே நிறம் மாறுவதையும் நாம் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் கட்டுப்படுத்த முடியும். என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : Oct 26, 2024, 05:10 PM IST
  • கருவளையத்தை நீக்க டிப்ஸ்
  • தக்காளியை ‘இப்படி’ உபயோகிக்கலாம்
  • என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
கருவளையத்தை கட்டுப்படுத்த தக்காளி போதும்..‘இப்படி’ பயன்படுத்துங்கள்! title=

5 Ways To Control Dark Circles : பலருக்கு, தங்கள் முகத்தில் அழகை கெடுக்கும் வகையில் இருக்கும் கருவளைத்தை கண்டாலே கவலையாக இருக்கும். தூக்கமின்மை, குறைவான நேரம் உறங்குதல், மரபணு குறைபாடு, சரும பிரச்சனை, வெயிலின் தாக்கம் என பல்வேறு காரணங்களால் கருவளையங்கள் ஏற்படலாம். இதையும், சருமத்தில் ஆங்காங்கே நிறம் மாறியிருக்கும் Hyperpigmentation பிரச்சனையையும் கட்டுப்படுத்த அனைவரது இல்லங்களிலும் ஒரு காய்கறி கண்டிப்பாக இருக்கும். அதுதான், தக்காளி. இதை எப்படி உபயோகிக் வேண்டும் என்பது குறித்து இங்கு விவரமாக பார்க்கலாம். 

தக்காளி ஜூஸ்:

தக்காளியை நேரடியாகவும், பயன்படும் வகையிலும் உபயோகிக்கும் ஒரு வகை, அதை ஜூஸாக போட்டு குடிப்பதுதான். தக்காளியை சக்கையாக பிழிந்து, அல்லது தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அடித்து அப்படியே முகத்தில் உபயோகிக்கலாம். இதில் இருக்கும் அதிகப்படியான வைட்டமின் சி, முகத்தில் நிறம் மாறியிருக்கும் இடங்களை சரிசெய்யவும், தோல் நிறம் மாறாமலும் பாதுகாக்கும் என கூறப்படுகிறது. 

தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் மாஸ்க்:

தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை வைத்து மாஸ்க் ஆக மாற்றி முகத்திற்கு உபயோகிக்கலாம். இது, கண்கள் உப்பி இருப்பதையும் (Puffiness), தோல் நிறம் மாறுதலை கட்டுப்படுதுமாம். தக்காளி-வெள்ளரிக்காய் ஆகிய இரண்டிலுமே சருமத்திற்கு ஈரப்பதம் கொடுக்கும் என கூறப்படுகிறது. மேலும், சோர்ந்து போயிருக்கும் சருமத்தையும் மேம்படுத்த இந்த மாஸ்க் உதவுகிறது.

தக்காளி எலுமிச்சை ஸ்க்ரப்:

வழக்கமாக, ஸ்க்ரப் போட்டு தேய்த்தால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் மொத்தமாக வெளியேறும் என்று கூறுவர். அதிலும் தக்காளியிலும் எலுமிச்சையிலும் இருக்கும் சிட்ரிக் அமிலம், அந்த அழுக்குகளை விரைவில் அகற்றவல்லது. 

அரை தக்காளி, அரை எலுமிச்சையை பிழிந்து அதை நன்றாக கலக்கி உங்கள் முகத்திலும், கருவளையம் இருக்கும் இடத்திலும் நன்றாக தேய்க்க வேண்டும். பின்ன, 10 நிமிடங்கள் ஊற வைத்து முகம் கழுவ வேண்டும். இதை, வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்யலாம்.

மேலும் படிக்க | தக்காளி சூப்பர்புட் தான்... ஆனால் இந்த பிரச்சனை இருக்கிறவங்க தவிர்ப்பது நல்லது

தக்காளி தயிர் மாஸ்க்:

இந்த மாஸ்கை தயார் செய்ய முதலில் நல்ல பழுத்த தக்காளியை பிழிந்து அதிலிருந்து இரண்டு டேபிள் ஸ்பூன் சாறையும், இரண்டு ஸ்பூன் வெறும் தயிரையும் சேர்த்து கலக்க வேண்டும். நன்கு கலக்கிய பின் கருவளையம் மற்றும் பிக்மெண்டேஷன் இருக்கும் இடங்களில் தடவ வேண்டும். இதை, 20 முதல் 30 நிமிடங்கள் முகத்தில் ஊற வைத்து பின்பு முகம் கழுவலாம். 

தக்காளி ஸ்லைஸ்:

தக்காளியை துண்டு துண்டாக வெட்டி, அதனை நேரடியாக கருவளையங்கள் இருக்கும் இடங்களில் வைக்கலாம். கண்களை மூடி 15 முதல் 20 நிமிடங்கள் வைத்தால் அது கருவளையங்கள் மேலும் வளராமல் தடுக்கும் என்று கூறப்படுகிறது. 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கருவளையங்களை மாயமாய் மறைய செய்யும் சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News