"விஜய் 62" : இதுதானா விஜய்-ன் நியூ லுக்?- See Pic

மெர்சல்' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் 62-வது படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார். 

Last Updated : Jan 28, 2018, 09:31 AM IST
    1. மூன்றாவது முறையாக ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்.
    2. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்.
    3. கடந்த சனவரி 19-ம் தேதி பூஜையோடு இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கியது.
"விஜய் 62" : இதுதானா விஜய்-ன் நியூ லுக்?- See Pic title=

மெர்சல்' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் 62-வது படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார். 

மூன்றாவது முறையாக ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இது விஜய்-ன் 62_வது படம். படத்திற்கு ஒளிப்பதிவாளராக கிரிஸ் கங்காதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். தேசிய விருது வென்ற ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு நடிக்கிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கடந்த சனவரி 19-ம் தேதி பூஜையோடு இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கியது. விஜய் அவர்கள் கிளப் செய்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். விஜய் 62 படம் இந்த வருட தீபாவளிக்கு வெளிவரும் என ஏ.அர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 'விஜய் 62' படத்தில் விஜய்யின் நியூ லுக் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தில் விஜய் இன்னும் இளமையான தோற்றத்தில் இருக்கிறார். இந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

 

Trending News