பிளிப்கார்ட் நிறுவனம் 2022ம் ஆண்டின் இறுதியில் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த தள்ளுபடியினை வழங்குகிறது. சாம்சங் கேலக்சி பட்ஸ் 2 போன்ற வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் அமேசானில் ரூ.6,894 தள்ளுபடி விலையில் விற்கப்படுவதை பார்த்திருப்பீர்கள் ஆனால் அதைவிட சூப்பரான சலுகையினை ப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஐபோன் 13 ஸ்மார்ட்போனை ப்ளிப்கார்ட் மிக குறைந்த விலையில் விற்பனை செய்கிறது மற்றும் 5ஜி மொபைல்களுக்கு சிறந்த தள்ளுபடிகளையும் வழங்குகிறது.
மேலும் படிக்க | ரெட்மீ ஸ்மார்ட் வாட்சில் இத்தனை அம்சங்களா? ஸ்மார்போனே வேண்டாம்
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 13-ஐ ரூ 69,990 க்கு விற்பனை செய்கிறது, ப்ளிப்கார்ட்டில் ரூ.7,991 வரை தள்ளுபடியை பெறலாம். ஆப்பிள் நிறுவனம் தனது பழைய மொபைலுக்கு கூட அப்டேட்டுகளை வழங்குகிறது, ஆனால் இந்த மொபைலின் கேமரா அவ்வளவு சிறப்பாக இல்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் சாம்சங் கேலக்சி எஸ்22+ சிறந்த கேமரா அனுபவத்தை தருவதாக கூறப்படுகிறது. இந்த ஃபிளாக்ஷிப் மொபைல் மிகவும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது, இதன் ஆரம்ப விலை ரூ.69,999க்கு விற்கப்படுகிறது. ஃபெடரல் வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியும் கிடைக்கிறது.
ரூ.43,999க்கு விற்கப்பட்ட பிக்சல் 6ஏ மொபைலானது ப்ளிப்கார்ட் இயர் எண்ட் விற்பனையில் சிறந்த தள்ளுபடியை பெறுகிறது, இதன் விலை ரூ.29,999 ஆகக் குறைந்துள்ளது. ரூ.30,000 விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ எட்ஜ் 30 மொபைலானது ப்ளிப்கார்ட் தள்ளுபடியில் உங்களுக்கு ரூ.22,999க்கு கிடைக்கிறது. குறைந்த விலையில் 5ஜி மொபைலை வாங்க விரும்புபவர்களுக்கு சாம்சங் கேலக்சி எப்23 மொபைல் சிறந்த தேர்வாக இருக்கும், இதன் விலை ரூ.14,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதேசமயம் ஃபெடரல் வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்துபவர்கள் ரூ.13,499க்கு வாங்கலாம்.
மேலும் படிக்க | இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது! புத்தாண்டில் புதிய திருப்பம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ