கொச்சி: திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்வதுண்டு. ஆனால் தற்காலத்தில் கல்யாணங்களை சட்டப்பூர்வமான பதிவு செய்வது என்பது அவசியமாகிவிட்டது.
திருமணம் என்பது இரு மனங்களின் இணைவாக இருந்தாலும் சமூகத்தில் வாழும்போது, சமூகத்தின் அங்கீகாரமும், சட்ட அங்கீகாரமும் தேவைப்படுகிறது.
தற்போதைய துரிதமான வாழ்க்கை என்று அவசரயுகத்தில், கொரோனா போன்ற கொடிய வைரஸ் தொற்றும் உலகின் நியதிகளை மாற்றக் கட்டாயப்படுத்துகிறது.
Also Read | Tirupati: திருமலையில் நடந்த முதல் திருமணம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
நியதிகளும், விதிமுறைகளும் காலத்திற்கு ஏற்றவாறு மாறுவது இயல்பானதே. அதன் அடிப்படையில் திருமணத்தை ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக சட்டபூர்வமான சாத்தியங்கள் என்ன என்பதை சிந்திக்கும் காலம் இது.
இதை உறுதிப்படுத்துகிறது கேரள உயர்நீதிமன்றத்தின் சட்ட அமர்வு. சிறப்பு திருமண சட்டத்தின் (Special Marriage Act) கீழ் திருமணத்தை வீடியோ கான்பரன்சிங் (video conferencing) மூலம் ஆன்லைனில் நடத்த முடியுமா என்பதை கேரள உயர் நீதிமன்றத்தின் பெரிய சட்ட அமர்வு ஆராயும்.
திருமணத்தின்போது மணமகன் மற்றும் மணமகள் நேரடியாக கலந்துக் கொள்வது அவசியம் இல்லை என்று பல மனுதாரர்கள் தாக்கல் செய்திருந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பிபி சுரேஷ்குமார், விசாரணையை பல நீதிபதிகள் அடங்கிய சட்ட அமர்வு விசாரிப்பது சரியாக இருக்கும் பரிந்துரைத்தார்.
Also Read | 24 வயது இளைஞனை திருமணம் செய்யும் 17 பேரக்குழந்தைகளின் 61 வயது பாட்டி
ஆனால், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணங்களை ஆன்லைனில் நடத்துவதை கேரள மாநில அரசு ஆதரிக்கவில்லை. கல்யாணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு முன்பு, மணமகன், மணமகள் மற்றும் இரு தரப்பு சாட்சிகள், திருமண அதிகாரியின் முன் ஆஜராவது அவசியம் ஆகும்.
ஆன்லைன் முறைப்படி அனுமதி வழங்கப்பட்டால், திருமணங்களின் மின்னணு பதிவேட்டை (electronic register of marriages) பராமரிப்பது மற்றும் ஆன்லைனில் பணம் செலுத்தும் முறையை (online mode of payment) அமைப்பது கட்டாயமாக்கப்படும் என்றும் அது கூறியுள்ளது.
திருமணத்தை நடத்துவதற்கான மற்றொரு தேவை என்னவென்றால், குறைந்தபட்சம் இரு தரப்பினரில் ஒருவர் திருமண அதிகாரியின் பிராந்திய வரம்பிற்குள் இருக்கும் பகுதியில் குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு முன் இருக்க வேண்டும்.
எனவே, வெளிநாடுகளில் வசிக்கும் இரண்டு நபர்கள், தங்குமிடத் தேவையை பூர்த்தி செய்யாவிட்டால் ஆன்லைனில் தங்கள் திருமணத்தை நடத்த முடியாது என்று அரசு தரப்பு வாதிட்டது.
Also Read | மீண்டும் திருமணம் செய்துக்கொண்ட பிரபல நடிகர்; வைரலாகும் புகைப்படம்
மனுதாரர்களின் வழக்கறிஞர்களான ஏ அஹ்சர், ஜவஹர் ஜோஸ் மற்றும் வி அஜித் நாராயணன் ஆகியோர் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணங்களை ஆன்லைனில் பதிவு செய்ய முடியும், எனவே, சடங்கிற்கும் சம்பந்தப்பட்ட தரப்பினர் நேரடியாக ஆஜராவது அவசியமில்லை என்று வாதிட்டனர்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் தோன்றுவது நேரில் ஆஜராவதைப் போன்றது என்றும், ஆனால் அவர்கள் நேரடியாக ஒருவரையொருவர் தொட முடியாது என்பதைத் தவிர வேறு வித்தியாசம் இல்லை என்று பல்வேறு தீர்ப்புகள் இருப்பதாக மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
மாலைகளை மாற்றிக் கொள்வது, கைகுலுக்குவது என எந்த வகையிலும் திருமணம் நிச்சயிக்கப்படலாம் என்றும், இருவரும் திருமணமான தம்பதிகள் என்று அவர்களே சொல்லும்போது அதை சிறப்ப்பு திருமணச் சட்டம் ஏற்றுக் கொள்ளலாம் என்று மனுதாரர்களின் தரப்பு வாதிட்டது.
சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் கையொப்பம் இடுவதை டிஜிட்டல் வடிவத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் இது அங்கீகரிக்கப்பட்டது என்றும் வாதிகள் தரப்பில் கூறப்பட்டது. தற்போது இந்த விஷயத்தை கேரள உயர்நீதிமன்றத்தின் பெரிய சட்ட அமர்வு விசாரிக்கும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR