பெண்கள் மெட்டி அணிய காரணம் என்ன

மெட்டி என்பது தற்போது திருமணமான இந்து சமயப் பெண்கள் தங்கள் கால் விரல்களில் அணியும் வளையம் போன்ற அணிகலன் ஆகும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 23, 2018, 03:47 PM IST
பெண்கள் மெட்டி அணிய காரணம் என்ன title=

மெட்டி என்பது தற்போது திருமணமான இந்து சமயப் பெண்கள் தங்கள் கால் விரல்களில் அணியும் வளையம் போன்ற அணிகலன் ஆகும். 

பழங்காலத்தில் இது ஆணுக்குரிய அணிகலனாக இருந்தது. திருமணமான ஆணுக்கு மெட்டியும், பெண்ணுக்கு தாலியும் அடையாள அணிகலன்கள் ஆகும். ஒரு ஆண் திருமணமானவன் என்பதனை, அவனின் பாதங்களைப் பார்க்கும் பெண் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்களின் கால்களில் மெட்டி அணிவிக்கப்பட்டது. 

காலமாற்றத்தினால் மெட்டி, பெண்ணுக்குரிய அணிகலனாகியது. மெட்டி அணிதல் இந்தியாவின் சில பகுதிகளில் திருமணமான பெண்களுக்கு நிகழும் ஒரு முக்கியச் சடங்காகும்.

பெண்கள் மெட்டி அணிய காரணம் என்ன?

திருமணம் ஆனதும் கால் கட்டை  விரலுக்கு அடுத்த விரலில் பெண்கள் மெட்டி அணிவர். கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. எனவே, பெண்கள் காலில் மெட்டி அணிவதால் கருப்பைப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால்தான் திருமணத்தில் பெண்கள் காலில் மெட்டியை அணிகின்றனர்.

பெண்களின் கர்ப்பக் காலத்தில் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படுகின்றன. கர்ப்பகாலத்தின் போது இந்தக் கால் விரல் நரம்பினை அழுத்தித் தேய்த்தால் மேற்கண்ட வலிகள் குறையும். 

Trending News