Indian Oil Carnival offer: SUV, கார், பைக் மற்றும் பல பரிசுகளை வெல்ல ஒரு அரிய வாய்ப்பு

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பண்டிகைக்கால சலுகையில் எஸ்யூவி, கார்கள், பைக்குகள் மற்றும் இலவச பரிசுகள் போன்ற பம்பர் சலுகைகளை வெல்ல வாய்ப்பு கிடைக்கும்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 9, 2020, 05:13 PM IST
  • இந்தியன் ஆயில் நிறுவனம் பண்டிகைக்கால பரிசுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
  • மிக எளிய வழியில் மிகப் பெரிய பரிசுகளை அள்ளலாம்.
  • இலவச பரிசுகள் போன்ற பம்பர் சலுகைகளை வெல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Indian Oil Carnival offer: SUV, கார், பைக் மற்றும் பல பரிசுகளை வெல்ல ஒரு அரிய வாய்ப்பு title=

புதுடில்லி: இந்தியன் ஆயில் நிறுவனம் சில்லறை விற்பனை நிலையங்களில் (பெட்ரோல் பம்புகள்) ரூ .400 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள பெட்ரோல் / டீசல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எஸ்யூவி, கார்கள், பைக்குகள் மற்றும் இலவச பரிசுகள் போன்ற பம்பர் சலுகைகளை வெல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் (Indian Oil) நிறுவனத்தின் பண்டிகைக்கால சலுகையாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் திருவிழா சலுகையில் எவ்வாறு பங்கேற்பது?

ரூ .400 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையில் பெட்ரோல் / டீசல் (Petrol-Diesel) வாங்கும் வாடிக்கையாளர் 9052155555 க்கு 'டீலர் கோட் <ஸ்பேஸ்> பில் எண் <ஸ்பேஸ்> பில் தொகை' என்று எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். டீலர் கோட் என்பது இந்தியன் ஆயில் பெட்ரோல் பம்பின் தனித்துவமான 6 இலக்க கோடாகும். 'பில் நம்பர்’ என்பது நீங்கள் வாங்கிய பெட்ரோல் அல்லது டீசலுக்கு பெட்ரோல் பம்ப் வழங்கிய பில்லில் உள்ள எண்ணாகும். பில் தொகை நீங்கள் செலுத்திய கட்டண ரூபாயின் அளவாகும். டீலர் குறியீடு, பில் எண் மற்றும் பில் தொகைக்கு இடையில் ஒற்றை வெற்று இடம்தான் (Single blank space) விட வேண்டும்.

2 வெவ்வேறு பெட்ரோல் பம்புகளிலிருந்து (Petroll Bunk) வாங்கிய அல்லது பம்பிலிருந்து பெறப்பட்ட இரண்டு வெவ்வேறு பில்களில், ஒரு மொபைல் எண்ணிலிருந்து ஒரு நாளைக்கு 2 SMS-கள்தான் அனுப்ப முடியும்.

ALSO READ: 

இந்தியன் ஆயில் திருவிழா போட்டியின் பரிசுகள் பற்றிய விவரங்கள்:

இந்த பிரச்சாரத்தின்போது அறிவிக்கப்பட்டுள்ள லக்கி டிராக்களுக்கான பரிசுகள்:

a. ஒரு எஸ்யூவி (மெகா லக்கி டிரா)

b. நான்கு கார்கள் (மெகா லக்கி டிரா)

c. 16 பைக்குகள் (மெகா லக்கி டிரா)

d. 25 வாராந்திர வெற்றியாளர்களுக்கு,

தலா ரூ .5,000 மதிப்புள்ள இலவச எரிபொருள்

e. 100 தினசரி வெற்றியாளர்கள் (X XTRAREWARDS உறுப்பினர்களுக்கு மட்டுமே, அதாவது XTRAREWARDS திட்டத்தில் பரிவர்த்தனை செய்தவர்கள் மட்டுமே) தலா ரூ .100 மதிப்புள்ள இலவச எரிபொருள்.

ALSO READ: 

Trending News