கைதியை காதலித்து கரம்பிடித்த இளம்பெண்; குடும்பம் நடத்த தனி அறை!

கைதியை 13 ஆண்டுகளாக காதலித்த அமெரிக்க இளம்பெண் சட்டப்படி திருமணம் செய்து கொண்டதையடுத்து அவர்களுக்கு சிறைக்குள் தனி வீடு!!

Last Updated : Sep 13, 2019, 03:14 PM IST
கைதியை காதலித்து கரம்பிடித்த இளம்பெண்; குடும்பம் நடத்த தனி அறை! title=

கைதியை 13 ஆண்டுகளாக காதலித்த அமெரிக்க இளம்பெண் சட்டப்படி திருமணம் செய்து கொண்டதையடுத்து அவர்களுக்கு சிறைக்குள் தனி வீடு!!

திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்" என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ்வுறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது. 

அதுவும், இந்திய திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்று கூறலாம். தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர். இந்நிலையில், கைதியை 13 ஆண்டுகளாக காதலித்த அமெரிக்க இளம்பெண் சட்டப்படி திருமணம் செய்து கொண்டதையடுத்து அவர்களுக்கு சிறைக்குள் தனி வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

 அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரை சேர்ந்த இளம்பெண் 16 வயதில் சந்தித்த நபர் 23 வருடங்கள் தண்டனை பெற்று சிறை சென்றபோதும் கடிதம் மூலம் காதலை வளர்த்து அவரை திருமணம் செய்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நினா முதன்முறையாக தனது காதல் கணவரான மைக்கேலை ஒரு பார்க்கிங்கில் சந்தித்தார். அப்போது மைக்கேலுக்கு 17 வயது. நினாவுக்கு 16 வயது. சில வாரங்களிலேயே ஆயுதம் ஏந்தி கொள்ளையடித்த வழக்கில் மைக்கேல் கைதாகி 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.

காதலன் 23 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறைக்கு சென்றால் 16 வயது இளம்பெண் என்ன செய்வாள்? மைக்கேலை காதலித்த நினா அவர் சிறை செல்வதற்கு முன்பே தொடர்ந்து கடிதம் எழுதுகிறேன் என உறுதி அளித்துவிட்டார். முதல் 6 ஆண்டுகள் இவர்களுக்கு இடையேயான காதல் கடிதம் மூலம் மட்டுமே வளர்ந்துள்ளது. மைக்கேல் மீது நினாவுக்கு இன்னும் காதல் அதிகமானது. 2012 ஆம் ஆண்டு சிறையில் இருவரும் சந்தித்தனர். அதன்பின் சந்திப்புகள் அடிக்கடி நடந்துவந்தது. தனது காதலை ரகசியமாக வைத்திருந்தார். அவரது தாய் மற்றும் நெருங்கிய தோழி இருவருக்கு மட்டுமே இந்த விவகாரம் தெரியும்.

மைக்கேல் தனது திருமண விருப்பத்தை தெரிவித்துள்ளார். நினாவும் சம்மதித்தார். 6 வருட காத்திருப்புக்கு பின் சட்டப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தம்பதியர் மாதத்துக்கு 48 மணி நேரங்கள் வரை பார்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இவர்களுக்காக சிறை வளாகத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட தனி வீடு ஒதுக்கப்பட்டது. மைக்கேலுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து தனது காதல் கணவரை உலகுக்கு அறிமுகம் செய்தார். இது மைக்கேலுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது. அதன்பின்னரும் நினா சிறையில் நடக்கும் தங்கள் சந்திப்புகளை தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறார்.

 

Trending News