கொரோனா வைரஸ் கடந்த மூன்று ஆண்டுகளாக மக்களை பாடாய்படுத்தி வருகிறது. ஒரு அலை, இரண்டு அலை என வரிசையாக வந்து கொண்டே இருக்கிறது. மூன்று அலைகளை வெற்றிகரமாக எதிர்கொண்ட மக்களை மீண்டும் அடுத்த அலை அச்சுறுத்தி வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் அலைகள் மக்களுக்கு மரண பயத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற நிலையில், அடுத்தடுத்த கொரோனா அலைகளுடன் மக்கள் வாழ பழகத் தொடங்கிவிட்டனர். கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு சீனாவில் இப்போது வேகமாக பரவத் தொடங்கிவிட்டது. அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் சூழலில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரான் பிஎப்.7 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் லேசான அறிகுறிகளுடன் காணப்படும் இந்த வைரஸ், இன்னும் வீரியம் அடையக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே கொரோனா தடுப்பூசிகளை முறையாக செலுத்திக் கொண்டவர்கள், குழந்தைகள் ஆகியோரை அதிகம் பாதிக்காது என்றும், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக கொண்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மத்திய அரசும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு பரவலை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. விமான நிலையங்களில் பரிசோதனை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்த தொடங்கியிருக்கிறது.
இந்த புதிய வைரஸின் பரவல் வேலைக்கு செல்வோர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருப்பதால், டெக் உள்ளிட்ட பெரிய ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டத்தை பரிசீலிக்கத் தொடங்கியிருக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததால் ஆஃபீஸூக்கு ஊழியர்களை அழைத்த நிறுவனங்கள் தற்போது வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் முறைக்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளனர். இதென்ன ரிபீட்டு மோடாக இருக்கிறது என மைண்ட்வாய்ஸில் கேட்கும் ஊழியர்கள், எப்படி சமாளிக்கிறதோ என குமுறவும் செய்கின்றனர்.
மேலும் படிக்க | COVID-19: இனி ‘இந்த’ மாநிலத்தில் மாஸ்க் கட்டாயம்! புதிய விதிமுறைகள் அமல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ