உத்திரபிரதேசத்தில் சீனாவில் இருந்து வந்தவருக்கு கொரோனா! பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது

Coronavirus Latest Update: சீனாவில் இருந்து உத்திரபிரதேசம் வந்த பயணிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 25, 2022, 08:56 PM IST
  • சீனாவில் இருந்து உத்திரபிரதேசம் வந்த பயணிக்கு கொரோனா
  • கொரோனா பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை சீனாவில் அதிகரிப்பு
  • புத்தாண்டை அச்சுறுத்தும் கொரோனா
உத்திரபிரதேசத்தில் சீனாவில் இருந்து வந்தவருக்கு கொரோனா! பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது title=

Corona Update: சீனாவில் இருந்து உத்திரபிரதேசம் வந்த பயணிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் மற்றொரு நபருக்கு கோவிட் பாசிட்டிவ் என்று தெரிய வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு, சீனாவில் இருந்து திரும்பிய நபருக்கு தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது, அந்த பரிசோதனையின் அறிக்கையில், சீனாவில் இருந்து வந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

சீனாவில் அதிகரித்து வரும் கோவிட் BF.7 வகை மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில், குஜராத் மற்றும் ஒடிசாவில் கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன.. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் மற்றொரு கோவிட் பாசிட்டிவ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி அச்சத்தை அதிகரித்துள்ளன.

கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் சீனாவில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு ஆக்ராவுக்குத் திரும்பினார், அதன் பிறகு அவருக்கு ஒரு தனியார் ஆய்வகத்தில் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அறிக்கை வந்த பிறகு, அந்த நபருக்கு கோவிட் பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் படிக்க | புதிய வகை கொரோனா - மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம்

இந்த விவகாரம் வெளியில் வந்ததையடுத்து, சுகாதாரத் துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ஆக்ராவின் ஷாகஞ்ச் பகுதியில் வசிக்கும் இந்த 40 வயது நபர், டிசம்பர் 23 அன்று கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள சீனாவில் இருந்து ஆக்ராவுக்கு திரும்பினார். இளைஞருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டறியும் முயற்சியை சுகாதாரத் துறையினர்  தொடங்கியுள்ளனர்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்

கோவிட் பாசிட்டிவ் நபர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் மற்றும் மரபணு வரிசைப்படுத்தலுக்காக அவரது மாதிரி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும், இதுவரை, அந்த நபருக்கு கோவிட் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

சீனாவில் தினமும் ஆயிரக்கணக்கான கொரோனா வழக்குகள் பதிவாகி வருவதால், அதிகரித்து வரும் கோவிட் பாதிப்பு குறித்து இந்திய அரசு முழு எச்சரிக்கை நிலையில் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் சப்ளை தடைபடாமல் இருக்க அரசு ஏற்கனவே பணிகளை தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க | புதிய வகை கரோனா : மீண்டும் அமலுக்கு வரும் பாதுகாப்பு நடைமுறைகள்... என்னென்ன தெரியுமா?

பிரதமர் மோடி வேண்டுகோள் 

ஞாயிற்றுக்கிழமை, 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம், கரோனாவில் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 227 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை சிதைத்த பனிப்புயல்! அமெரிக்காவில் 17 பேர் பலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News