சாலையில் வாகனம் ஓட்டும்போது ஓட்டுநர் உரிமம் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது இல்லாமல், வாகனம் ஓட்டும்போது, அபராதம் கட்ட நேரிடும். ஓட்டுநர் உரிமம் 2020 இறுதி வரை செல்லுபடியாகும் என்பது உங்களுக்குத் தெரியும். மறுபுறம், உங்கள் ஓட்டுநர் உரிமம் காலாவதியானால், மீண்டும் புதிய உரிமத்தை பெற முதலில் இருந்து தொடங்க வேண்டும். அதாவது முதலில் லேர்னிங் லைசன்ஸ் (Learning License) பெற வேண்டும்.அதன் பிறகு நிரந்தர உரிமம் வழங்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், உரிமத்தின் செல்லுபடியாகும் முன் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்.
ALSO READ | Airtel, Jio, Vi-க்கு போட்டியாக, BSNL வழங்கும் அசத்தலான ரீசார்ஜ் திட்டம்
அதற்காக நீங்கள் RTO க்கு செல்ல வேண்டியதில்லை. உங்கள் ஓட்டுநர் உரிமமும் காலாவதியாகி, கொரோனா தொற்று நோய் (Corona Virus) காரணமாக, ஆர்டிஓ அலுவலக்ம் சென்று புதுப்பிக்க விரும்பவில்லை என்றால், அதை ஆன்லைனில் புதுப்பிக்கலாம். ஓட்டுநர் உரிமத்திற்கு ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது, என்பதை அறிவோம்.
ஆன்லைன் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கும் முறை
- ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க, முதலில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வலைத்தளத்திற்குச் செல்லவும்.
- ஒரு லேப்டாப் அல்லது கணினியில் Parivahan.Gov.In என டைப் செய்யவும்
- இப்போது உங்கள் மாநிலத்தையும் நகரத்தையும் தேர்ந்தெடுக்கவும்
- உரிமம் புதுப்பித்தல் ஆப்ஷனை இங்கே கிளிக் செய்யவும்
- அவ்வாறு செய்த பிறகு, உங்கள் விவரங்களை விண்ணப்ப படிவத்தில் உள்ளிட வேண்டும்.
- இங்கே, உங்கள் அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், முகவரி ஆதாரம், உங்கள் புகைப்பட அடையாளம் ஆகியவற்றைப் பதிவேற்றவும்.
- இப்போது இதற்கான கட்டணத்தை டெபாசிட் செய்யும் ஆப்ஷன் இருக்கும். அங்கே கட்டணங்களை சமர்ப்பிக்கவும்.
- இந்த செயல்முறையை நிறைவு செய்த பிறகு, அதன் விபரங்களை பதிவிறக்கம் செய்து அச்சிட்டு வைத்துக் கொள்ளவும்.
ALSO READ | அசத்தலான Apple iPad Pro, இப்போது இந்தியாவில், சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை விபரம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR