தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா-வை அமைக்கவ வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
அரசியல்வாதிகள், MLA-கள், உயர் அதிகாரிகள், MP-க்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் செய்தல் ஆகியவற்றை விசாரிக்க லோக் ஆயுக்தா, லோக்பால் சட்டம் கடந்த 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து இந்த சட்டத்துக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் நாள் குடியரசு தலைவர் ஒப்புதல் கிடத்தது. பின்னர் அதே மாதம் 16-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. எனினும், இதுவரை தமிழகம், ஜம்முகாஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, தெலங்கானா, திரிபுரா, அருணாச்சலப்பிரதேசம், டெல்லி, மேற்குவங்கம் ஆகிய 12 மாநிலங்களில் இந்த சட்டம் இயற்றப்படவில்லை.
இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது... "கடந்த 2013-ஆம் ஆண்டே லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் இயற்றப்பட்டு, பின்னர் 2014-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனாலும் பெரும்பாலான மாநிலங்களில் இச்சட்டம் இயற்றப்படவில்லை" என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை கடந்த மார்ச் 23-ஆம் நாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் லோக் ஆயுக்தா அமைக்காதற்கான காரணம் கேட்டு விளக்கப் பங்கங்களை சமர்பிக்க உத்தரிவிட்டது. இந்த உத்தரவின் படி தமிழகத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விளங்களை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் இன்று தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா-வை அமைக்கவ வேண்டும் என உத்தரவிட்டுள்ளது!