வரும் 5-ஆம் தேதி நடைப்பெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் தொழிலாளர்கள் பங்கேற்பாராகள் என ம.தொ.மு பொதுச்செயலாலர் துரைசாமி தெரிவித்துள்ளார்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் திமுக தலைமையில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசினை கண்டித்து வரும் ஏப்ரல் 5ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த தீர்மானம் நிரைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் தொழிலாளர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ம.தொ.மு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது...
"திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒரு மனதாக எடுத்த முடிவின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசாங்கத்தையும், அதற்குத் துணைபோய்க்கொண்டு இருக்கின்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்தையும் கண்டிக்கக்கூடிய முறையிலும், உடனடியாக மத்திய அரசாங்கம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், 05.04.2018 அன்று நடைபெற இருக்கின்ற முழு அடைப்புப் போராட்டத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் தொழிலாளர்கள் அனைவரும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." என தெரிவிக்கப்பட்டுள்ளது