70வது தேசிய விருதுகள்: எந்தெந்த தமிழ் படங்களுக்கு என்னென்ன விருது? இதோ லிஸ்ட்!

70th National Film Awards 2024 Winners : தமிழ் திரைப்படங்கள் சில, தேசிய விருதுகளை பெற்றிருக்கின்றன. அதன் முழு லிஸ்டை இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 17, 2024, 09:49 AM IST
  • 70வது தேசிய விருதுகள் லிஸ்ட்
  • யார் யாருக்கு என்னென்ன விருது?
  • பொன்னியின் செல்வன் 1 படத்திற்கு மட்டும் பல..
70வது தேசிய விருதுகள்: எந்தெந்த தமிழ் படங்களுக்கு என்னென்ன விருது? இதோ லிஸ்ட்! title=

70th National Film Awards 2024 Winners : 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தமிழ் படங்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அவை என்னென்ன தெரியுமா? 

திரைப்படங்களுக்கு, உயரிய விருது கொடுக்கும் 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கபட்டிருக்கிறது. இதில், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இசை, சிறந்த நடன இயக்குநர் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த லிஸ்டில், சில தமிழ் படங்களின் விருதும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முழு லிஸ்டை இங்கு பார்ப்போம். 

சிறந்த படத்திற்கான விருது..

மணிரத்னம் இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று படத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லெக்ஷமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களுள் ஒன்றாக இருந்த இந்த படம், உலகளவில் சுமார் ரூ.450-500 கோடி வரை வசூலித்துள்ளது. இந்த படத்திற்கு தற்போது சிறந்த படத்திற்கான விருது கிடைத்திருக்கிறது. 

சிறந்த பின்னணி இசை:

பொன்னியின் செல்வன் 1 படத்திற்கு, இன்னும் சில விருதுகளும் கிடைத்திருக்கிறது. அதில் ஒன்று சிறந்த இசை. இதற்கான விருது, படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்திருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள், பெரிய அளவில் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. 

சிறந்த ஒளிப்பதிவு:

பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது. இந்த விருதிற்கு சொந்தக்காரர் ரவி வர்மன் ஆவார். கூடவே, சிறந்த ஒலி வடிவமைப்பிற்கான விருதும் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று படத்திற்கு கிடைத்திருக்கிறது. இதற்கான விருது, ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு கிடைத்திருக்கிறது.

திருச்சிற்றம்பலம்:

தனுஷ் நடிப்பில், 2022ஆம் ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு சிறந்த நடன இயக்குநருக்கான விருது கிடைத்துள்ளது. “மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே..” பாடலுக்கு இவ்விருது கிடைத்திருக்கிறது. இந்த பாடலுக்கு நடன இயக்குநராக இருந்தவர் ஜனி மாஸ்டர் மற்றும் சதீஷ் கிருஷ்ணன் ஆவர். 

சிறந்த நடிகைக்கான விருது..

தமிழில், சிறந்த நடிகைக்கான விருதை, திருச்சிற்றம்பலம் படத்திற்காக நடிகை நித்யா மேனன் பெருகிறார். இவர், இப்படத்தில் ஷோபனா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 

மேலும் படிக்க | “விஜய்க்கு அப்புறம் இவர்தான்” ஹெச்.வினோத்தின் அடுத்த டார்கெட்! அட இவரா..

சிறந்த நடிகருக்கான விருது:

சிறந்த நடிகருக்கான விருதை, காந்தாரா படத்தின் நாயகனும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி பெற்றிருக்கிறார். 2022ஆமம் ஆண்டு வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றருந்ததது குறிப்பிடத்தக்கது. 

பிற மொழி படங்களுக்கு கிடைத்த விருது:

>சிறந்த கன்னட திரைப்படத்திற்கான விருதை, கே.ஜி.எஃப் 2 திரைப்படம் பெற்றிருக்கிறது. 

>சிறந்த மலையாள திரைப்படத்திற்கான விருதினை சவுதி வெள்ளைக்கா படம் பெற்றிருக்கிறது .

>சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான விருதை, காந்தாரா படம் பெற்றிருக்கிறது. 

>சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்கான விருதினை கார்த்திகேயா 2 படம் பெற்றிருக்கிறது. 

>சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான விருதினை அன்பறிவ் பெற்றுள்ளனர். இந்த விருது, அவர்களுக்கு காந்தாரா படத்திற்காக கிடைத்திருக்கிறது. 

மேலும் படிக்க | ஓடிடியில் ஓஹோவென ரிலீஸாகும் சூப்பர் படங்கள்! எதை, எதில் பார்க்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News