விஜய், அஜித்தை முந்தும் தனுஷ்! - ஆச்சர்யத்தில் கோலிவுட்!

பாகுபலி, கேஜிஎஃப், ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் பான் - இந்தியா அளவில் கவனம் குவித்துள்ளதால் தென்னிந்திய சினிமாவினரின் பார்வை பான் - இந்தியா படங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது,

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 10, 2022, 01:34 PM IST
  • தென்னிந்திய சினிமாவினரின் பார்வை பான் - இந்தியா படங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது
  • பான் - இந்தியா படங்களை எடுக்கும் முயற்சியில் தமிழ் சினிமாவினர் களமிறங்கியுள்ளனர்.
  • பாகுபலி, கேஜிஎஃப், ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் பான் - இந்தியா அளவில் கவனம் குவித்துள்ளன.
விஜய், அஜித்தை முந்தும் தனுஷ்! - ஆச்சர்யத்தில் கோலிவுட்! title=

பாகுபலி படங்கள் அடைந்த பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு தென்னிந்திய சினிமா உலகம் பான் - இந்தியாவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. கன்னடத்தில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் உருவாக்க ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் கவனத்தைப் பெற்றது. சமீபமாக கன்னட சினிமாவையே திருப்பிப்போட்ட படம் என்றுகூடக் கூறலாம். அந்த அளவுக்கு கேஜிஎஃப்பின் தாக்கம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

பாகுபலி படங்களைத் தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் அண்மையில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படமும் பான் - இந்தியா அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதற்கு முன்பாக வெளியான தெலுங்குப் படமான அல்லு அர்ஜூனின் புஷ்பா படமும் வியக்கத்தக்க வகையில் இந்திய அளவிலான கவனத்தைப் பெற்றது. இதையடுத்து தமிழ் சினிமாவின் பார்வையும் தற்போது பான் - இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. அண்மையில் வெளியான அஜித்தின் வலிமை மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் விஜய்யின் பீஸ்ட் ஆகிய படங்கள் பான் - இந்தியா ரிலீஸ் படங்களே.

                                                                             RRR poster

விஜய், அஜித் படங்கள் பான் - இந்தியா அளவில் ரிலீஸ் ஆவதும் இதுவே முதன்முறை. அதே நேரம், உருவாக்க ரீதியாக இவை நேரடி பான் - இந்தியா படங்களாக அங்கீகரிக்கப்படாமல்  ‘டப்பிங் படங்கள்’ என்ற அளவிலேயே கணக்கில் கொள்ளப்படுகின்றன. இதனால் நேரடி பான் - இந்தியா படங்கள் எடுக்கும் முயற்சியில் தமிழ் சினிமாவினர் இறங்கியுள்ளனர். 

மேலும் படிக்க | Beast Vs KGF2: ரிலீசுக்கு முன்பே ‘கே.ஜி.எஃப்-2’வை வென்ற பீஸ்ட்!

அந்த வரிசையில் நடிகர் தனுஷும் தற்போது பான் - இந்தியா படத்தில் நடிக்கவுள்ளாராம். ராக்கி, சாணிக் காயிதம் படங்களின் இயக்குநரான அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ள இந்தப் படத்துக்கு கேப்டன் மில்லர் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கேங்க்ஸ்டர் கதைக்களத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளதாம்.

                                                                                     Dhanush

நடிகர் தனுஷ் ஏற்கெனவே இந்திப் படங்களில் நடித்துக் கவனம் பெற்றவர். ஆனால் விஜய், அஜித்துடன் ஒப்பிடுகையில் தென்னிந்திய அளவில் வியாபார ரீதியிலான வரவேற்பு தனுஷுக்கு சற்றுக் குறைவுதான் எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் பான்- இந்தியா படத்தில் தனுஷ் நடிக்கவிருப்பது புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பெரும் வெற்றியடையும் பட்சத்தில் தனுஷின் கரியரில் முக்கியமான திருப்புமுனையாக இப்படம் அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு நடிகர்களுடன் பெரும் பொருட்செலவில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படமும் பான் இந்தியா படமாக உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | விஜய்- ஷாருக்கான் கூட்டணியில் புதிய படம்?! - வாய் பிளக்கும் திரையுலகம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News