அசுரன் திரைப்படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியானது!

அசுரன் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரை  நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்!

Updated: Aug 23, 2019, 08:35 AM IST
அசுரன் திரைப்படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியானது!
Pic Courtesy: twitter/@dhanushkraja

அசுரன் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரை  நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்!

வடசென்னை' படத்தைத் தொடர்ந்து தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் படம் " அசுரன் " . நாவலாசிரியர் பூமணி எழுதிய 'வெக்கை' என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் 'அசுரன்' படத்தில் நடிகர் தனுஷ், அப்பா, மகன் என்று இரண்டு தோற்றங்களில் நடித்து வருகிறார். 

வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். 

மாரி 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கடந்தாண்டு டிசம்பர் 22-ஆம் தேதி அசுரன் படம் தொடர்பான அறிவிப்பை தனுஷ் வெளியிட்டார். இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து மஞ்சு வாரியர் நடிக்கிறார். 

முன்னதாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனுஷ் கையில் ஈட்டி இருப்பது போன்று போஸ்டர் அமைந்திருந்தது. இதன் மூலம் இத்திரைப்படம் அதிரடி காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷூக்கு ஜோடியாக நடிக்க நடிகை சினேகா ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கு நடிகர் 'நவீன் சந்ரா',  தனுஷுக்கு வில்லனாக இந்த படத்தில் நடிக்க உள்ளார், என சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம்  அறிவித்துள்ளது.

அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்த நிலையில்  இரண்டாவது போஸ்டரை நடிகர் தனுஷ் தற்போது வெளியிட்டுள்ளார். படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.