கார்த்தியின் அடுத்த இயக்குநர் இவர்தான் - கோடையில் சூட்டிங்

நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் ராஜூ முருகன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் சூட்டிங் மே மாதத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 04:36 PM IST
  • ராஜூ முருகன் - கார்த்திக் இணையும் படம்
  • மே மாதம் தொடங்கும் சூட்டிங்
  • விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறாரா?
கார்த்தியின் அடுத்த இயக்குநர் இவர்தான் - கோடையில் சூட்டிங் title=

நடிகர் கார்த்தி இப்போது ஒரே நேரத்தில் ‘விருமன்’ மற்றும் ‘சர்தார்’ படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுக்கான பணியை அவர் முடித்ததும், அடுத்ததாக இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ராஜு முருகன் இதற்கு முன் ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’ ஆகிய படங்களை இயக்கியவர். ஜோக்கர் படத்துக்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. 

மேலும் படிக்க | விக்ரம் கிலிம்ஸியில் இதையெல்லாம் கவனித்தீர்களா?

புதிய படத்துக்கான அனைத்து பணிகளையும் நிறைவு செய்துள்ள ராஜு முருகன், நடிகர் கார்த்திக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் கைகோர்க்கப் போகும் படத்துக்கான அறிவிப்பு 2020 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால், அப்போது திடீரென பரவிய கொரோனா வைரஸால் படத்தின் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து நடிகர் கார்த்தி இயக்குநர் மணி ரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் பிஸியாக நடிக்கச் சென்றார். அதனைத் தொடர்ந்து சர்தார் மற்றும் விருமன் சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். 

இரண்டு படங்களுக்கான பணிகளும் விரைவில் முடிய இருப்பதால், ராஜூ முருகன் தன்னுடைய படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜூ முருகன் இது தொடர்பாக விஜய் சேதுபதியை அணுகி கதை கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் சூட்டிங் மே மாதம் தொடங்கப்படுகிறது. இதனால், அடுத்த மாதத்தில் படக்குழு தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

கார்த்தி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸாக உள்ளது.

மேலும் படிக்க | அஜித் பற்றி பேச யாருக்கும் அருகதை இல்லை.- ஆர்.கே.சுரேஷ் ஆவேசம்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News