பூர்ணிமாவை இன்ஸ்டாகிராமில் அன்பாலோ செய்த நடிகை இந்துஜா!

Poornima Bigg Boss: சமீபத்தில் பார்க்கிங் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார் நடிகை இந்துஜா.  

Written by - RK Spark | Last Updated : Nov 29, 2023, 05:29 PM IST
  • பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு உள்ளது.
  • வைல்கார்ட் என்ட்ரியில் 2 பேர் வந்துள்ளனர்.
  • கடந்த வாரம் பிராவோ, அக்ஷயா வெளியேறினர்.
பூர்ணிமாவை இன்ஸ்டாகிராமில் அன்பாலோ செய்த நடிகை இந்துஜா!  title=

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, நாளுக்கு நாள் புதிய புதிய ட்விஸ்ட்களுடனும் புதிய கேம்களுடனும் சுவாரஸ்யம் அதிகமாகி வருகிறது.  இது தவிர பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமலும் தினசரி எபிசோடுகள் உள்ளது. பிக் பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளராக உள்ள பூர்ணிமா ரசிகர்கள் மனதில் அவ பெயரை சந்தித்து வருகிறார். யூட்யூபில் வீடியோக்கள் மூலம் பிரபலமான பூர்ணிமா பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறார் என்ற தகவல்கள் வந்தவுடன் அவரது ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் வாரத்திலேயே தனது தனித்துவமான பேச்சாள் அனைவரிடத்திலும் பிரபலம் அடைந்தார். மேலும் இரண்டு முறை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் கேப்டனாகவும் பொறுப்பேற்றார். ஒரு பெண் தொடர்ந்து இரண்டு முறை பிக் பாஸ் வீட்டில் கேப்டனானதும் இதுவே முதல் முறை.  இதுபோல் பல நல்ல பெயரை பெற்ற பூர்ணிமா, மாயாவுடன் கூட்டணி சேர்ந்ததிலிருந்து பொதுமக்களிடமும் ரசிகர்களிடமும் கெட்ட பெயரை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படம்... அதிகார்வப்பூர்வ அறிவிப்பு!

அர்ச்சனா, விசித்ரா போன்ற போட்டியாளர்களை புல்லிங் செய்து வேண்டுமென்றே டார்கெட் செய்ததில் இருந்து பூர்ணிமாவுக்கு இந்த நிலைமை ஏற்பட்டது.  வார இறுதியில் கமலிடம் திட்டு வாங்கியும் இவர் திருந்தவில்லை. தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை என்றும் தினசரி பிக் பாஸ் வீட்டில் புலம்பியும் வருகிறார். இந்நிலையில் இந்த வாரம் வெளியாகும் பார்க்கிங் படத்திற்காக ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை இந்துஜா பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தனர். நடிகை இந்துஜாவும் பூர்ணிமாவும் கல்லூரி காலத்தில் இருந்து நண்பர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற இந்துஜா பூர்ணிமாவிடம் சரியாக பேசவில்லை என்று பூர்ணிமா சக பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் கூறியிருந்தார்.

இதைப் பற்றி இந்துஜாவிடமும் பூர்ணிமா கேட்டார், அதற்கு நடிகை இந்துஜா அனைவரிடமும் ஒரே மாதிரி பழக வேண்டும் என்பதற்காக தான் உனக்கு தனி முன்னுரிமை அளிக்கவில்லை என்று கூறிச் சென்றார். இருப்பினும் பூர்ணிமா திரும்பத் திரும்ப இந்துஜா தனது நண்பர், நெருங்கிய தோழி. ஆனாலும் என்னை கண்டுக்காமல் சென்று விட்டார் என்று புலம்பி கொண்டிருந்தார். இந்நிலையில் தற்போது நடிகை இந்துஜா இன்ஸ்டாகிராமில் பூர்ணிமாவை அன்பாலோ செய்துள்ளார்.  பிக் பாஸ் வீட்டில் பூர்ணிமா இப்படி பேசியதால்தான் இந்துஜா பூர்ணிமாவே அன்பாலோ செய்திருக்கிறார் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பொதுமக்கள் ரசிகர்களை தாண்டி தற்போது நண்பர்களிடமும் கெட்ட பெயரை பெற்று வருகிறார் பூர்ணிமா.

மேலும் படிக்க | பருத்திவீரன் பஞ்சாயத்து: கொளுத்திப்போட்ட ஞானவேல் ராஜா, கொந்தளித்த நடிகர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News