25 லட்சம் ரூபாய்க்கு மனைவியாக இருக்க சொன்னார் தொழிலதிபர் - நீத்து சந்திராவின் பரிதாப நிலை

தொழிலதிபர் ஒருவர் 25 லட்சம் ரூபாய் சம்பளத்துக்கு தன்னை மனைவியாக இருக்க சொன்னார் என நடிகை நீத்து சந்திரா தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 14, 2022, 03:20 PM IST
  • யாவரும் நலம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நீத்து சந்திரா
  • நீத்து சந்திரா பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்
25 லட்சம் ரூபாய்க்கு மனைவியாக இருக்க சொன்னார் தொழிலதிபர் - நீத்து சந்திராவின் பரிதாப நிலை title=

யாவரும் நலம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நீத்து சந்திரா. அதனைத் தொடர்ந்து அவர் விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தார். 

Neetu Chandra

அதற்கு அடுத்ததாக அவருக்கு பெரிதளவிலான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே சேட்டை, சிங்கம் 3, திலகர் உள்ளிட்ட தமிழ் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார்.

மேலும் படிக்க | ஒரே ஃபோன் காலில் சிம்பு ஓ.கே.சொன்னார் - ஹன்சிகா ஓபன் டாக்

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்திருக்கும் நீத்து ஹாலிவுட்டிலும் தலை காட்டியிருக்கிறார். ஆனாலும் அவர் தற்போது எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் இருக்கிறார்.

 

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நீத்து சந்திரா, “ஒரு வெற்றிகரமான நடிகையின் தோல்விக் கதைதான் எனது கதை. தேசிய விருது வாங்கிய 13 பேருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். ஆனால் இன்று நடிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறேன்.

 

மாதம் 25 லட்சம் ரூபாய் தருகிறேன். என் மனைவியாக இருக்கிறாயா என பிரபல தொழிலதிபர் ஒருவர் என்னிடம் கேட்டார். அது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும், வருத்தத்தையும் கொடுத்தது. தற்போது என்னிடம் பணமும் இல்லை படமும் இல்லை.

மேலும் படிக்க | Kangana Ranaut : கங்கனா கூட வேலை செஞ்சதுதான் என்னோட பெரிய தவறு : கொதித்த இயக்குநர்

அதனை நினைத்து கவலையாக இருக்கிறது. நிறைய படங்களில் நடித்தும் நான் தேவையில்லாதவளோ என்றே எனக்கு தோன்றுகிறது.

குறிப்பாக, ஆடிஷன் ஒன்றில் கலந்துகொண்டேன். ஆடிஷன் நடந்த ஒரு மணி நேரத்திற்குள்ளேயே இந்தப் படத்துக்கு நீங்கள் சரிவரமாட்டீர்கள் என என்னை நிராகரித்துவிட்டனர்” என்றார்.

மேலும் படிக்க | தனுஷ் புகைபிடித்த வழக்கு : ஐஸ்வர்யா ரஜினிக்கு சின்ன நிம்மதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News