LTTE தலைவர் விடுதலைப் புலிகள் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு ’மேதகு’

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்கிறது ‘மேதகு’ திரைப்படம். தமிழக திரைத்துறையினர் பலரும் திரைப்படத்திற்கு சமூக ஊடகங்களில் ஆதரவு தெரிவித்துள்ளனர்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 26, 2021, 12:13 PM IST
  • விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ‘மேதகு’
  • ஓடிடியில் நேற்று வெளியாது
  • Black sheep நிறுவனத்தின் Pay Per View வசதியின் கீழ் BS value OTT தளத்தில் வெளியானது
LTTE தலைவர் விடுதலைப் புலிகள் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு ’மேதகு’ title=

சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை பதிவு செய்துள்ள ‘மேதகு’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதற்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்யும் ‘மேதகு’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கிட்டு. ஏற்கனவே பிரபலமான Black sheep என்கின்ற நிறுவனத்தின் Pay Per View என்கின்ற வசதியின் கீழ் BS value OTT தளத்தில் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது.  

தமிழீழ திரைக்களம் நிறுவனம் உலகத் தமிழர்களிடையே நிதி திரட்டி இந்தத் திரைப்படத்தை தயாரித்துள்ளது. 

இந்த திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என, இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் சத்யராஜ், சசிக்குமார், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் உள்ளிட்டோர்  சமூக ஊடகங்களில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  

ஈழத்தின் போராட்டத்தையும் அர்ப்பணிப்பையும் உலகுக்கு உரக்கச் சொல்லும் படமாக மேதகு படம் உருவாகி இருக்கிறது என்று இயக்குநர் சசிக்குமார் ட்வீட் செய்துள்ளார். 

ஒளிப்பதிவாளர் ரியாஸ், இசையமைப்பாளார் பிரவீன் குமார், கலை இயக்குனர் முஜிபூர் ரகுமான், படத்தொகுப்பு உட்பட பலர் இந்த திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.    

இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் எப்படியெல்லாம் பறிக்கப்பட்டு அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதையும், அதனை தனது சிறு வயது முதல் பார்த்து கோபமடைந்த ஒரு சாதாரண இளைஞன் (Prabhakaran) எப்படி தனது இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தும் முடிவுக்கு வருகிறான் என்பதை பற்றி பேசுகிறது திரைப்படம்.  

Also Read | விஜய்யின் மாஸ்டர் சாதனையை முறியடித்தது பீஸ்ட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News