இளம் இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகர் அஜித்?

குருதி ஆட்டம் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தனது அடுத்த படத்தில் அஜித்துடன் பணிபுரிய போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Aug 12, 2022, 09:32 AM IST
  • ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சமீபத்தில் குருதி ஆட்டம் படம் வெளியானது.
  • அடுத்ததாக அஜித்தை வைத்து இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
  • அஜித் தற்போது ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார்.
இளம் இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகர் அஜித்? title=

வெற்றி, அபர்ணா பாலமுரளி, மணிகண்டன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரது நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டில் வெளியான '8 தோட்டாக்கள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ்.  மேலும் இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் தான் ஸ்ரீ கணேஷ்.  அதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள 'குருதி ஆட்டம்' படம் கடந்த-5ம் தேதி வெளியானது.  இந்த படத்தை 2018-ல் வெளியிட திட்டமிட்ட நிலையில், சில பிரச்சனைகள் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போய் தற்போது இந்த ஆண்டு வெளியாகியுள்ளது. 

'8 தோட்டாக்கள்' படத்திற்கு கிடைத்த வெற்றி தற்போது வெளியாகியுள்ள 'குருதி ஆட்டம்' படத்திற்கு கிடைக்கவில்லை, இன்றளவும் பல ரசிகர்கள் மத்தியில் '8 தோட்டாக்கள்' மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவரது சமீபத்திய படத்தில் நடிகர் அஜித்குமாரை பற்றிய சில குறிப்புகள் இடம்பெற்றிருந்தது, இதன் காரணமாக இயக்குனர் ஸ்ரீ கணேஷ், நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறார்  என்று சில பேச்சுக்கள் எழுந்து வந்தது.  இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல்களின்படி கூடிய விரைவில் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தனது அடுத்த படத்தில் அஜித்துடன் பணிபுரிய போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

sriganesh

மேலும் படிக்க | எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள கடமையை செய் படத்தின் திரைவிமர்சனம்!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 'வலிமை' படம் வெளியான பின்னர், தற்போது நடிகர் அஜித் மீண்டும் ஹெச்.வினோத் 'ஏகே61' படத்தில் நடித்து வருகிறார்.  தற்காலிகமாக 'ஏகே61' என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கிறார்.  இந்த படம் இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் ஏகே62 படத்தில் நடிக்கவிருக்கிறார்.  மேலும் வெளியாகியுள்ள தகவலின்படி அஜித், புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் நடிக்கபோவதாகவும் சில செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | தமன்னாவை லாக் செய்த ஜெயிலர்! சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News