தமன்னாவை லாக் செய்த ஜெயிலர்! சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியா?

ஜெய்லர் படத்தில் நடிகை தமன்னாவும் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 11, 2022, 08:17 PM IST
  • ஜெய்லர் படத்தில் தமன்னா
  • சென்னையில் சூட்டிங் தொடங்கியது
  • ரஜினி விரைவில் பங்கேற்கிறார்
தமன்னாவை லாக் செய்த ஜெயிலர்! சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியா? title=

அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு கொஞ்சம் இடைவெளி விட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெய்லர் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் ஜெய்லர் படத்தின், திரைக்கதையை மிக மிக சுவாரஸ்யமாக இருக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் நெல்சன். கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதால், பீஸ்ட் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த அந்தப் படம் வசூல் ரீதியாக லாபமாக இருந்தாலும், பெரும் விமர்சனங்களை சந்தித்தது.

இந்தப் படத்தின் ரிலீஸூக்கு முன்பே நெல்சன் திலீப்குமாரை தேர்ந்தெடுத்துவிட்டார் ரஜினி. சன்பிக்சர்ஸ் நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக படத்தின் காம்போவை அறிவித்தது. ஆனால், பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவுக்கான வரவேற்பை பெறாததால், ஜெய்லர் படம், அறிவிக்கப்பட்டபடி தொடங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. விமர்சனங்களை பொருட்படுத்ததாத சன்பிக்சர்ஸ் மற்றும் ரஜினி ஆகியோர், ஜெயிலர் படத்தின் வேலைகளை கவனிக்குமாறு நெல்சனிடம் அறிவுறுத்தினர். நெல்சன் திலீப்குமாரும், படத்திற்கான வேலைகளை படுமும்முரமாக கவனித்து வந்தார். தற்போது ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து சூட்டிங் விரைவில் தொடங்கியுள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் படிக்க | ரோலக்ஸ் - டில்லிக்காக ஒரு ரீமேக் கதை; ரகசியம் உடைத்த லோகேஷ் கனகராஜ்

ஓய்வு பெற்ற ஜெயிலர் கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். பிரியங்கா அருள்மோகன் மற்றும் யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். சர்பிரைஸாக நடிகை ரம்யா கிருஷ்ணன், ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் படையப்பா படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் மெஹா ஹிட் அடித்திருந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு இருவரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், நடிகை தமன்னாவும் படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கிறாரோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் சூட்டிங்கில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.

மேலும் படிக்க | ஜெய்பீம் பட விவகாரம்: நடிகர் சூர்யாவுக்கு எதிரான வழக்கு ரத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News