அந்தகாரம் திரைப்படம்: திகில் நகைச்சுவைகள் மற்றும் கணிக்கக்கூடிய ஜம்ப் பயங்களுடன் த்ரில்லர் நிறைந்த வி விக்னராஜனின் "அந்தகாரம்" (Andhaghaaram) திரைப்படம், இப்போது நெட்ஃபிக்ஸ் (Netflix) தளத்தில் வெளியாகியுள்ளது. அந்தகாரம் என்றால் இருள் என்று பொருள். இதனால் படத்தில் பெரும்பாலான சீன்கள் இருளில் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஒரு பார்வையற்ற நூலக பராமரிப்பாளர். சிக்கலான கடந்த கால மனநல மருத்துவர் மற்றும் மனச்சோர்வடைந்த கிரிக்கெட் வீரரைச் சுற்றி படம் நகருக்கிறது.
வெவ்வேறு நபர்கள் தங்கள் லேண்ட்லைன் தொலைபேசியில் அழைப்புகளைப் பெறும் கருப்பு மற்றும் வெள்ளை காட்சிகளுடன் தொடங்கி, படம் மெதுவாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதேநேரத்தில் ஆர்வத்தையும் தூண்டுகிறது. கிரிக்கெட் வீரர் வினோத் (Arjun Das) தனது அறையில் இருப்பது ஒரு மோசமான ஆவி என்று நம்புகிறார். பார்வையற்ற செல்வம் (Vinoth Kishan) ஒரு அப்பாவியாகத் தெரிகிறார். டாக்டர் இந்திரன் (Kumar Natarajan) தனது நோயாளியால் சுடப்பட்டு தனது குரலை இழக்கிறார். அவருடன் என்ன நடக்கிறது? இந்த கேள்விகள் தான் படத்தை முன்னோக்கி செலுத்துகின்றன.
திரைக்கதை சற்று குழப்பமாக இருக்கிறது. பார்வையாளர் தங்கள் மூளைக்கு அதிக வேலை கொடுக்க வேண்டியது அவசியம். ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட த்ரில்லர் கதை கிட்டத்தட்ட மூன்று மணிநேர ஓடுவது சற்று அபத்தமானது. ஆனாலும் இயக்குனர் விக்னராஜன் அதை கிட்டத்தட்ட சரியாக கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். அவருக்கு இது முதல் படம் என்பது நம்பமுடியவில்லை. தனது உழைப்பை கொட்டியிருக்கிறார். த்ரில்லர் படத்திற்கு தேவையான அனைத்து வேலைகளையும் படக்குழுவினர்கள் சிறப்பாக செய்துள்ளனர். கண்டிப்பாக படத்தை ஒருமுறை பார்க்கலாம். புது அனுபவமாக இருக்கும்.
ALSO READ | அம்பலமான உதயநிதி - நயன்தாரா இடையில் இருந்த ரகசிய உறவு..!
#அந்தகாரம் திரைக்கதை மிகவும் மெதுவாக நகருகிறது மிக அழுத்தமான ஒளிப்பதிவு அதற்கு கூடுதல் பலம் சேர்க்க இசை எடிட்டிங் மிரட்டல் கலை இயக்குனரின் வேலை சிறப்பான பங்களிப்பு சிறப்பான மிஸ்டரி சஸ்பென்ஸ் திரில்லராக இந்த #Andhaghaaram பொறுமை காத்தால் இந்த காவியம் சிறப்பு @NetflixIndia
— joe.shejo (@JoeShejo) November 24, 2020
யாவரும்நலம் படத்துல TV'னா
அந்தகாரம் படத்துல TelePhone
Seat edging thriller BESTதல Reference வேற #Andhaghaaram pic.twitter.com/g7jlypS0Hh
— James Rhodey² (@War_machine2) November 24, 2020
நல்ல த்ரில்லர் படத்திற்கு தேவையான அனைத்து வேலைகளையும் படக்குழுவினர்கள் சிறப்பாக செய்துள்ளனர், மனமார்ந்த வாழ்த்துகள் . அந்தகாரம் என்றால் இருள் என்று பொருள் . படத்தின் மையப்புள்ளி இருள் என்றாலும் , படம் தமிழ் சினிமாவின் வெளிச்சம் தான் . அந்தகாரம் - தரம் . #குட்டிகமல் @Atlee_dir pic.twitter.com/es4tMTAGI9
— ManiArasan (@ManiAra66911365) November 24, 2020
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G