அண்ணா சீரியல் அப்டேட்: சூடாமணி கொடுத்த சர்ப்ரைஸ்.. சௌந்தரபாண்டியன் அதிர்ச்சி

Anna TV Serial Today Episode: இன்றைய அண்ணா சீரியல் எபிசோட்டில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 23, 2024, 12:52 PM IST
அண்ணா சீரியல் அப்டேட்: சூடாமணி கொடுத்த சர்ப்ரைஸ்.. சௌந்தரபாண்டியன் அதிர்ச்சி title=

Zee Tamil TV Serial Anna: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சூடாமணி ரத்னா கல்யாணத்தை பற்றி பேசிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது முத்துப்பாண்டி தான் இப்போ மாறிட்டானே, அப்படி இருக்கும் போது அவனால் எந்த பிரச்னையும் வர போறது இல்ல.. அவளுக்கு கல்யாணத்த முடித்து விடலாம் என்று சொல்ல சண்முகமும் பண்ணிடுவோம் என்று சம்மதம் சொல்கிறான். இவர்கள் பேசுவதை கேட்ட ரத்னாவுக்கு சூடாமணி மீது மதிப்பு வருகிறது. 

அதனை தொடர்ந்து பாண்டியம்மா சௌந்தரபாண்டிக்கு போன் செய்து சூடாமணி ரிலீஸ் ஆகி விட்ட விஷயத்தை சொல்ல இவர் அதிர்ச்சி அடைகிறார், அப்போ கோவிலில் பார்த்தது சூடாமணி தான், ஷண்முகம் வீட்டிற்கு போய் அதனை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கிறாள். 

மறுபக்கம் பரணி முக்கியமான வேலை விஷயமா வெளியே போய்ட்டேன். கனி மற்றும் வீராவை ரெடி பண்ணவே இல்லை என்று பேசி கொண்டிருக்க இருவரும் அழகாக தயாராகி வருகின்றனர். பரணி யார் ரெடி பண்ணது என்று கேட்க சூடாமணி தான் என்று சொல்ல அதை கேட்டு சந்தோசப்படுகிறாள். 

பிறகு பரணி நான் இன்னைக்கு சமைக்கவே இல்ல என்று சொல்ல சூடாமணி எல்லாம் நான் சமைத்து விட்டேன் என்று சாப்பாட்டை கொண்டு வந்து வைக்க அனைவரும் அவளை ஆச்சரியமாக பார்க்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க - பிரபல நடிகரின் 20 வயது மகள் உயிரிழப்பு! காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News