அண்ணாத்த படத்தின் முன்பதிவு தொடங்கியது: குஷியான ரசிகர்கள்

சமீபத்தில் வெளிவந்த படத்தின் டீசரும் பாடல்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளன. இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. 

Written by - ZEE Bureau | Last Updated : Oct 26, 2021, 11:34 AM IST
  • அண்ணாத்த படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
  • படத்துக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
  • அண்ணாத்த படத்தின் 4வது சிங்கிள் நேற்று வெளியானது.
அண்ணாத்த படத்தின் முன்பதிவு தொடங்கியது: குஷியான ரசிகர்கள்

சமீப காலங்களில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படங்களில் அண்ணாத்த படம் முதல் இடத்தில்  உள்ளது. ரஜினி படம் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்துதான். அவரது ஒவ்வொரு படத்துக்காகவும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பது வழக்கம். அந்த வகையில், அண்ணத்த படத்துக்கான எதிர்பார்ப்பும் ஆர்வமும் எந்த விதத்திலும் குறையாமல் ரஜினி படங்களுக்கே உறித்தான உச்சத்தில் உள்ளது.

சமீபத்தில் வெளிவந்த படத்தின் டீசரும் பாடல்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளன. இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. 

Image

தீபாவளி விருந்தாக ரசிகர்களை மகிழ்விக்க வரும் அண்ணாத்த படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளதால், ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தலைவர் படத்தின் டிக்கெட்டை முன்பதிவு செய்வதே ஒரு திருவிழாதானே!!

சர்வதேச அளவில் ரசிகர்களைக் கொண்டுள்ள சூப்பர் ஸ்டாரின் (Super Star) படங்கள், மனிதனால் போடபட்ட எல்லைகள், மொழி, நாடு என்ற அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவை. பல உலக நாடுகளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள் சக்கை போடு போட்டுள்ளன. 

அந்த வகையில், அண்ணாத்த படத்துக்கும் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கும் என படக்குழிவினர் நம்புகின்றனர். அண்ணாத்த படத்தின் முன்பதிவு அமெரிக்காவில் நேற்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சற்று நேரத்திற்கெல்லாம் அங்கு சுமார் 50 லட்சத்திற்கு மேல் முன்பதிவு நடந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இந்த எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், இந்த ஆண்டு, அமெரிக்காவில், அதிக வசூல் செய்த இந்திய படமாக அண்ணாத்த சாதனை படைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

ALSO READ: பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் 'வாசாமி'!

இதற்கிடையில், அண்ணாத்த (Annaatthe) படத்தின் 4வது சிங்கிள் நேற்று வெளியானது. இந்த பாடலில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் நடனமாடியுள்ளனர். கீர்த்தி சுரேஷிற்கு திருமண வாழ்த்து கூறும் விதமாக அதாவது பெண்ணின் பெருமைகளை பெண் வீட்டார் பாடும் விதமாக இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலை அமுதவன் எழுதியுள்ளார். டி.இமான் இசையில் இந்த பாடலை பாடகர்கள் நாகாஸ் அசிஸ், ஆண்டனி தாசன், வந்தனா ஸ்ரீனிவாசன் ஆகியோர் பாடியுள்ளனர்.

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் 'அண்ணாத்த' படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா (Nayanthara), மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

 ALSO READ: நாளை எனக்கு 2 முக்கியமான நிகழ்வுகள்: ரஜினிகாந்த் உற்சாக ட்வீட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News