விஜய்யை குறித்து இன்றைய அறிவிப்பு என்ன? “பிகில்” படத்தின் புதிய அப்டேட்?

தளபதி விஜய்யை குறித்து அறிவிப்பு என்னவாக இருக்கும் என ரசிகர்கள் குழம்பிய நிலையில் மிகுந்த ஆர்வத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 8, 2019, 04:00 PM IST
விஜய்யை குறித்து இன்றைய அறிவிப்பு என்ன? “பிகில்” படத்தின் புதிய அப்டேட்?  title=

“பிகில்” படத்தின் தயாரிப்பாளர் இன்று மாலை 6 மணிக்கு தளபதி விஜய்யை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளார். அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என ரசிகர்கள் குழம்பிய நிலையில் மிகுந்த ஆர்வத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தளபதி விஜய்-யை வைத்து கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி இயக்குநர் அட்லீ இயக்கி வரும் படத்தின் பெயர் “பிகில்”. அட்லீ - விஜய் இணையும் மூன்றாவது படமாகும் இது. இந்த படத்தின் பஸ்ர்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், விவேக், இந்துஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். “பிகில்” படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்த படம் வரும் தீபாவளி வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், இன்று மாலை 6 மணிக்கு தளபதி விஜய்யை குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளிவரவுள்ளது. இதுகுறித்த தகவலை அர்ச்சனா கல்பாதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், இது வழக்கமாக வரும் படத்தின் இசை வெளியீடு, சிங்கிள் வெளியீடு, டீஸர், டிரெய்லர் என எதுவும் இல்லை என்றும், அதை விட முக்கியமான விஜய் பற்றிய மகிழ்ச்சியான வேற லெவல் அப்டேட் என்று தெரிவித்துள்ளார்.

 

 

Trending News