தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் ஆர்யா. இவர் பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதற்கிடையே ஜெர்மனியில் வசிக்கும் விட்ஜா என்ற இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் மனு ஒன்றை எழுதியுள்ளார். அதில், நடிகர் ஆர்யா (Actor Arya) தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் 70 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இந்த புகாரை அவர் சி.பி.சி.ஐ.டி போலீசிலும் ஆன்லைன் மூலம் புகார் தெரிவித்தார்.
இது தொடர்பான வழக்கு சென்னை நீதிமன்றத்திலும் நிலுவையில் இருந்து வருகிறது. மேலும் விசாரணையின் போது நீதிபதிகள் ஆர்யாவின் மீதான புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்களைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து ஜெர்மனி பெண் தொடர்ந்த வழக்கு தொடர்பாக ஆஜராகும்படி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகர் ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பினார்கள். அதன்பேரில் நடிகர் ஆர்யா மத்திய குற்றப்பிரிவு போலிசார் முன்பு ஆஜரானார்.
இந்நிலையில் அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். நடிகர் ஆர்யா தன்னை விட 17 வயது இளையவரான நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Rangan Vaathiyar memes: நெட்ப்ளிக்ஸ் வரை சென்றடைந்த வாத்தியாரே மீம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR