அஸ்வினை ஃபீல் பண்ண வைத்த சிவாங்கி, அப்படி என்ன நடந்தது?

அஷ்வின் (Ashwin), பாபா பாஸ்கர், கனி, பவித்ரா லட்சுமி, ஷகிலா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு சென்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 10, 2021, 11:26 AM IST
அஸ்வினை ஃபீல் பண்ண வைத்த சிவாங்கி, அப்படி என்ன நடந்தது? title=

குக் வித் கோமாளி என்பது ஒரு தனியார் தொலைக்காட்சியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்க சமையல் கலை நிபுணர்களான செப் தாமு மற்றும் செப் வெங்கடேஷன் பட் ஆகியோர்கள் தலைவராக உள்ளார்கள்.

இந்த சமையல் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக பிக்பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக, அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது 'குக் வித் கோமாளி' (Cook with Comali) நிகழ்ச்சி. முதல் சீசன் சுமாரான வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பிரபலங்களுக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவும் துவங்கிவிட்டது. 

ALSO READ | குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? Viral ஆகும் ஃபோட்டோ!

இந்த சீசனின் கடைசி ஷூட்டிங் தளத்தில் இருந்து குக் வித் கோமாளி பிரபலங்கள் வெளியிட்ட உருக்கமான பதிவுகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. புகழ், அஷ்வின், சிவாங்கி (Sivaangi), தர்ஷா குப்தா, கனி, பவித்ரா, ஷகிலா, மணிமேகலை, சரத், பாலா, பாபா பாஸ்கர், சுனிதா உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் அஷ்வின் (Ashwin), பாபா பாஸ்கர், கனி, பவித்ரா லட்சுமி, ஷகிலா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு சென்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதி எபிசோடு இந்த வாரம் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்ததைத் தொடர்ந்து, போட்டியாளர்களில் ஒருவரான அஷ்வின், குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றியும் சக போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளாக பங்கேற்றவர்களைப் பற்றியும் தனது அனுபவங்களை மிகவும் உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் “நீன் என்னை மிஸ் பண்ணுவியா?” என்று ஷிவாங்கி கேட்டதை குறிப்பிட்டு நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

 

 

ALSO READ | குக் வித் கோமாளி சிவாங்கியின் இந்த போட்டோ இணையத்தில் வைரல்!

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News