“பாகுபலி 2” சர்ச்சை: சத்யராஜின் பதிலுக்கு கமல் பாராட்டு!!

Last Updated : Apr 22, 2017, 12:17 PM IST
“பாகுபலி 2” சர்ச்சை: சத்யராஜின் பதிலுக்கு கமல் பாராட்டு!!

கர்நாடகாவில் 'பாகுபலி 2' வெளியீட்டில் எழுந்துள்ள சர்ச்சைத் தொடர்பாக சத்யராஜின் பதிலுக்கு தமிழ் திரையுலகினர் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்.

பாகுபலி-2 படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என்று கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. காவிரி பிரச்சினையில் கன்னடர்களுக்கு எதிராக பேசிய நடிகர் சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே இந்த படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிப்போம் என்று அந்த அமைப்புகள் கெடுவிதித்து உள்ளன. இதனால் பாகுபலி-2 படக்குழுவினர் தவிப்பில் இருக்கிறார்கள்.

இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கன்னட மக்களிடம் என் மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தன்னுடைய நிலைப்பாடு குறித்து பேசி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார் சத்யராஜ்.

சத்யராஜின் பதிலுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய வரவேற்பை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்கள். 

நடிகர் சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததற்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:- “ சூழ்நிலையை உணர்ந்து வருத்தம் தெரிவித்த சத்யராஜ்க்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். மன்னிப்புக் கேட்கிறவன் பெரியமனுசன்” எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

More Stories

Trending News