கேன்ஸ் 2017 திரைப்பட விழாவில் பாகுபலி

Last Updated : May 21, 2017, 04:02 PM IST
கேன்ஸ் 2017 திரைப்பட விழாவில் பாகுபலி title=

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டு தோறும் உலக அளவில் திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. 

இந்த ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழா வருகிற 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

இதில், உலகில் உள்ள எண்ணற்ற சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த வருடம் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் திரையிட 19 திரைப்படங்கள் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இவற்றில் சமீபத்தில் வெளிவந்து வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்து வரும் ‘பாகுபலி-2’ படத்தை திரையிடப்பட்டுள்ளது. மேலும் நேற்று பாகுபலி படத்தின் முதல் பாகத்தை திரையிட்டுள்ளனர். இன்று பாகுபலி-2 படம் திரையிடப்படவிருக்கிறது.

Trending News