2023ல் இதுவரை வெளியான சிறந்த படங்கள்! மிஸ் பண்ணாம பாத்துருங்க!

2023ம் ஆண்டில் பல சிறந்த படங்கள் வெளியாகி உள்ளது.  இதில் சின்ன பட்ஜெட்டில் உருவாகி பாக்ஸ் ஆபிசில் அதிக வசூலை பெற்ற படங்களும் உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 20, 2023, 11:40 AM IST
  • டாடா படம் அனைவரையும் கவர்ந்தது.
  • கவின், அபர்ணா தாஸ் நடித்துள்ளனர்.
  • காதல் உறவை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
2023ல் இதுவரை வெளியான சிறந்த படங்கள்! மிஸ் பண்ணாம பாத்துருங்க! title=

சில நேரங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் நம்மை ஏமாற்றிவிடும்.  ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்படாத சில சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் நம்மை மகிழ்விக்கும்.  அந்தவகையில் 2023ம் ஆண்டில் நிறைய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்துள்ளது.  பெரிய ஹீரோ படங்களை விட, சில படங்கள் நல்ல வெற்றி பெற்றுள்ளன.

பரம்பொருள் (Paramporul) - 2023 ஆம் ஆண்டில் வெளியான த்ரில்லர் படங்களில் ஒன்று பரம்பொருள். நிச்சயமாக இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும்.  கோயில் சிலைகளை திருடும் ஒரு சிலை கடத்தல் மாஃபியாவின் கதை இது. ஒரு போலீஸ் அதிகாரியே சிலைகளை கடந்த முயற்சி  செய்கிறார். பின்பு என்ன ஆனது என்பதே கதை. 

மேலும் படிக்க - லியோ LCUல் இருக்கா? இல்லையா? திரைவிமர்சனம் இதோ!

அயோத்தி (Ayothi) - பொதுவாக திரைப்படம் பார்த்து அழுவதில்லை என்று சொன்னவர்கள் அயோத்தியை பார்த்து அழுகிறோம் என்று சொன்னார்கள். புதுமுகம் ஆர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, யஷ்பால் ஷர்மா மற்றும் புகழ் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.  அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஆன்மீக பயணம் செல்லும் ஒரு குடும்பத்தின் கதை இது. உணர்ச்சிகளால் நிரம்பிய இந்த படம் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும்.

விடுதலை பகுதி 1 (Viduthalai Part 1) - 2023ன் மற்றொரு பெரிய படம் விடுதலை பகுதி 1. துணைவன் (தோழன்) சிறுகதையிலிருந்து தழுவி, அரசாங்கத்திற்கும் புரட்சிகரக் குழுவிற்கும் இடையிலான மோதலில் சிக்கிய சூரி நடித்த ஒரு போலீஸ் அதிகாரி குமரேசனைச் சுற்றி படம் நகர்கிறது.  பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் சிறந்த நடிகர்கள் படத்தை தாங்கி பிடிக்கின்றனர்.  

டாடா (Dada) - கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடித்த காதல் படம். தற்செயலாக டீனேஜ் பெற்றோராக மாறினால் என்ன நடக்கும் என்பதை பற்றி பேசுகிறது தாதா.  ஒற்றைப் பெற்றோராக மகனுடன் தந்தை தனித்து விடப்பட்டார்.  இது ஒரு பீல்குட் படமாக உள்ளது.

சொப்பன சுந்தரி (Soppana sundari) - நீங்கள் ஒரு சிறந்த நகைச்சுவைத் திரைப்படத்தைப் பார்க்க விரும்பினால் ஐஸ்வர்யா ராஜேஷ், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி மற்றும் தீபா ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள சொப்பன சுந்தரி படம் உங்களுக்கானது.  லாட்டரியில் கார் வெல்லும் நடுத்தரக் குடும்பத்தைச் சுற்றி கதை நகர்கிறது.பேராசையால் ஒருவர் எவ்வளவு தூரம் கண்மூடித்தனமாகச் செல்ல முடியும் என்பதைக் காட்டும் ஒரு சரியான டார்க் காமெடி.

போர் தொழில் (Por Thozhil) - 2023 ஆம் ஆண்டின் சிறந்த திரில்லர்களில் ஒன்று போர் தொழில்.  சரத்குமார், அசோக் செல்வன் மற்றும் நிகிலா விமல் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஆரம்பம் முதல் இறுதி வரை உங்களை சீட் நுனியில் உட்கார வைக்கும்.

யாத்திசை (Yaathisai)- பாண்டியர்கள் சேரர்களை தோற்கடித்த ஏழாம் நூற்றாண்டிற்கு உங்களை அழைத்துச் செல்லும் திரைப்படம் யாத்திசை. சோழ வம்சத்தின் அதிகாரத்தை இழந்து, அதன் மக்கள் காடுகளில் வாழத் தள்ளப்பட்ட காலத்திலிருந்து பாண்டிய இளவரசன் ரணதீரனை அடிப்படையாகக் கொண்டது. 

பொம்மை நாயகி  (Bommai nayagi)- இந்த படம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை பற்றி பேசுகிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 9 வயது மகளுக்கு நீதி கிடைக்க ஒரு தந்தையின் போராட்டத்தை மையமாக வைத்து கதை நகர்கிறது. படத்தின் திரைக்கதை மிகவும் சக்தி வாய்ந்தது. யோகி பாபு இந்த படத்தில் நடித்துள்ளார்.

குடிமகான் (kudimagaan) - விஜய் சிவன், சாந்தினி தமிழரசன் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி நடித்துள்ள நகைச்சுவைத் திரைப்படமான குடிமகான், ஜூஸ் குடித்தாலே போதை ஆக வைக்கும் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு டீட்டோடலரைச் சுற்றி வருகிறது. 

மேலும் படிக்க | லியோ படத்தில் விஜய்யை அடுத்து அதிக சம்பளம் வாங்கியது யார்..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News