Bigg Boss சீசன் 4-ல் பெரிய மாற்றங்கள்: இம்முறை 80 நாட்கள், 12 போட்டியாளர்கள்!!

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் Bigg Boss நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது நான்காவது சீசன் அடுத்த மாதத்திலிருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Sep 20, 2020, 04:59 PM IST
Bigg Boss சீசன் 4-ல் பெரிய மாற்றங்கள்: இம்முறை 80 நாட்கள், 12 போட்டியாளர்கள்!!
Zee Media

கொரோனா காலத்திலும் சில விஷயங்கள் நம் சிந்தையைக் கவர தவறுவதில்லை. என்னதான் வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட போதிலும், அந்த போராட்டத்திலும் நம்மை மகிழ்விக்க, நம்மை திசை திருப்ப பல நிகழ்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி, சமீப நாட்களில் மக்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்துள்ள ஒரு செய்தி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வரும் ‘Bigg Boss’ நிகழ்ச்சி பற்றிய செய்தி.

உலக நாயகன் கமல் (Kamalahasan) தொகுத்து வழங்கும் Bigg Boss நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது Bigg Boss-ன் நான்காவது சீசன் (Bigg Boss Season 4) அடுத்த மாதத்திலிருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகைகள் லட்சுமி மேனன், சஞ்சனா சிங், சனம் ஷெட்டி, ஷாலு ஷம்மு, சிவானி நாராயணன் மற்றும் நடிகர்கள் ரியோ ராஜ், கரண், பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பலர் இந்த சீசனில் கலந்துகொள்ளக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

வழக்கமாக Bigg Boss நிகழ்ச்சி கடந்த 3 சீசன்களில் 16 போட்டியாளர்களைக் கொண்டிருந்தது. இது ஒரு 100 நாள் நிகழ்வாகும். ஆனால் கொரோனா வைரஸ் (Corona Virus) காரணமாக, இந்த முறை Bigg Boss போட்டியின் கால அளவு குறைக்கப்பட்டும் என்று கூறப்படுகிறது.

அதாவது இந்த ஆண்டு Bigg Boss நிகழ்ச்சியில் 12 போட்டியாளர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் Bigg Boss நிகழ்ச்சி 80 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

எனினும் இதன் காரணமாக நிகழ்ச்சியில் சுவாரசியம் குறைய வாய்ப்பே இல்லை என்றே தயாரிப்பாளர்கள் கூறி வருகிறார்கள். ஏற்கனவே Bigg Boss சீனன் 4-ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் பெயர்களுக்கான ஒரு பட்டியல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதில் சிலர் தாங்கள் Bigg Boss வீட்டிற்குள் வரவில்லை என தெளிவு படுத்தி வரும் நிலையில், இந்த பட்டியலில் இல்லாத சிலரது பெயர்களும் வெளி வந்துகொண்டிருக்கின்றன.

ALSO READ: Bigg Boss தமிழ் சீசன் 4 இல் வருகிறாரா இந்த ‘ஷகலக பேபி’ நடிகை? May be…..

கொரோனா காலத்து Bigg Boss எப்படி இருக்கும்? இந்த சீசனில் வரும் போட்டியாளர்களை ரசிகர்கள் எவ்வாறு ஆதரிக்கப்போகிறார்கள்? ஆரவாரம், கேளிக்கை, சதி, காதல், நட்பு, துரோகம் என அனைத்து மனித இயல்புகளையும் படம் போட்டுக் காட்டும் Bigg Boss வீடு இந்த சீசனில் நமக்குக் காட்டப்போகும் விஷயங்கள் என்னென்ன?

இந்த அனைத்து கேள்விகளுக்கும் எங்கள் வலைதளத்தில் அவ்வப்போது விடை அளித்துக்கொண்டே இருப்போம். Bigg Boss-ன் நான்காவது சீசனை (Bigg Boss Season 4) எங்களோடு இணைந்து பாருங்கள். சேர்ந்து மனித மனங்களை ஆராயலாம்! இதயங்களை புரிந்து கொள்ளலாம்! பாடங்கள் பல கற்கலாம்!!

Watch this space for more on Bigg Boss Season 4!!

ALSO READ: Bigg Boss தமிழ் சீசன் 4-ல் கலந்து கொள்ளும் 11 பிரபலங்களின் பட்டியல் வெளியீடு!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR