Bigg Boss பாலாவுக்கு போட்டி: wildcard entry-யாக வரப்போகிறாரா ஷிவானியின் சீரியல் ஹீரோ

வைல்ட் கார்டு எண்ட்ரியாக வீட்டிற்குள் அர்ச்சனா மற்றும் சுசித்ரா என இருவர் வந்துவிட்ட நிலையில், மூன்றாவதாக வரும் நபரைப் பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

Written by - ZEE Bureau | Last Updated : Nov 4, 2020, 11:11 AM IST
  • 19-ஆவது போட்டியாளராக ஷிவானியின் சீரியல் ஹீரோ அஸீம் வருகிறார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • பிரபலமான ஒரு சீரியலில் ஷிவானிக்கு ஜோடியாக அஸீம் நடித்தார்.
  • அஸீம் ஷிவானியின் காதலராகவும் கிசுகிசுக்களில் சிக்கியவர்.
Bigg Boss பாலாவுக்கு போட்டி: wildcard entry-யாக வரப்போகிறாரா ஷிவானியின் சீரியல் ஹீரோ

Bigg Boss Tamil-ன் நான்காவது சீசன் அக்டோபர் 4 ஆம் தேதி துவங்கியது. ஒவ்வொரு சீசனையும் போல இந்த சீசனும் பலரது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இருந்துள்ளது.

கொரோனா காலத்தில் மக்கள் தங்கள் மனதை சற்று லேசாக்கிக்கொள்ள ஒரு கருவியாக Bigg Boss Tamil-ன் நான்காவது சீசன் இருந்து வருகிறது என்று கூறலாம். தினமும் போட்டியாளர்களின் வெவ்வேறு பரிமாணங்களைப் பார்த்து நாம் நமது இறுக்கங்களையும் நமது பிரச்சனைகளையும் சிறிது நேரம் மறந்துதான் போகிறோம்.

இந்த நிலையில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வீட்டிற்குள் அர்ச்சனா மற்றும் சுசித்ரா என இருவர் வந்துவிட்ட நிலையில், மூன்றாவதாக வரும் நபரைப் பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

பிக் பஸ் வீட்டிற்குள் (Bigg Boss House) 19-ஆவது போட்டியாளராக ஷிவானியின் சீரியல் ஹீரோ அஸீம் வருகிறார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த செய்தி இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.

அஸீம் ஷிவானியின் காதலராகவும் கிசுகிசுக்களில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அஸீம் ஒரு மியூசிக் சேனல் ஆங்கராக சின்னத்திரையில் அறிமுகமானார். இதுவரை பல தொடர்களில் அவர் நடித்துள்ளார்.

பிரபலமான ஒரு சீரியலில் ஷிவானிக்கு ஜோடியாக அஸீம் நடித்தார். அப்போது, அஸீம்-ஷிவானி ஜோடி மிகவும் நன்றாக இருப்பதாக பேச்சுக்கள் தொடங்கி இருவருக்கும் இடையில் அஃபேர் என்ற வதந்தியும் பரவியது. சேனல் நடத்திய பரிசளிப்பு விழாவில் இருவருக்கும் ‘சிறந்த ரொமாண்டிக் ஜோடி’ என்ற விருதும் கிடைத்துள்ளது.

தொடர்ந்து சில சீரியல்களில் முக்கிய வேடங்களிலும், டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களிலும் இருவரும் நடித்து வந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் சிறு ஈகோ பிரச்சனை ஏற்பட்டது என்றும் பேசப்படுகின்றது.

ALSO READ: தளபதி விஜய் படத் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் 3 மாதம் சிறை தண்டனை விதித்து அதிர்ச்சி

எது பொய் எது உண்மை என இருவருமே எந்த விளக்கமும் அளித்தலில்லை.

எப்படி இருந்தாலும், இப்போது அஸீம் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவது உறுதியான செய்தியாக இருந்தால், வீட்டின் நிலைமையில் பல பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தன்னை மிகவும் அறிவாளி என்றும் பிளான் போட்டு காயை நகர்த்தும் போட்டியாளர் என்றும் கருதும் பாலாஜிக்கு அஸீம் போட்டியாக இருப்பார் என பிக் பாஸ் அபிமானிகள் கருதுகிறார்கள்.

Bigg Boss Tamil சீசன் 4-ஐப் பொறுத்தவரை சண்டைகளுக்கும் கூச்சல்களுக்கும் குறைவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் ஷிவானியின் ரீல் ஹீரோ அஸீம் வீட்டிற்குள் வந்தால் வீட்டின் சூழல் எப்படி மாறும் என்பதைப் பார்ப்பது சுவார்சியமாக இருக்கும்.

ஆரவாரம், கேளிக்கை, சதி, காதல், நட்பு, துரோகம் என அனைத்து மனித இயல்புகளையும் படம் போட்டுக் காட்டும் Bigg Boss வீடு இந்த சீசனிலும் நமக்கு இந்த அனைத்தையும் காட்டி வருகிறது.

Bigg Boss சீசன் 4-ஐ எங்களோடு இணைந்து பாருங்கள். சேர்ந்து மனித மனங்களை ஆராயலாம்! இதயங்களை புரிந்து கொள்ளலாம்! பாடங்கள் பல கற்கலாம்!!

Watch this space for more on Bigg Boss Season 4!!

ALSO READ: தீபாவளிக்கு வருகிறதா சிம்புவின் 'ஈஸ்வரன்' படத்தின் டீஸர்?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News