‘நீ பற்ற வைத்த நெருப்போன்று..’ விக்ரமனை தாக்கினாரா ‘பிக்பாஸ்’ வெற்றியாளர் அசீம்..?

Vikraman and Azeem: பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான விக்ரமன் ஒரு வழக்கறிஞரை காதலித்து ஏமாற்றியதாக செய்தி பரவியுள்ள நிலையில், அவரை மறைமுகமாக தாக்கும் வகையில் நடிகர் அசீம் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Jul 17, 2023, 02:44 PM IST
  • சர்ச்சையில் மாட்டிய பிக்பாஸ் விக்ரமன்.
  • குஷியில் வின்னர் அசீம்.
  • என்ன நடக்கிறது..?
‘நீ பற்ற வைத்த நெருப்போன்று..’ விக்ரமனை தாக்கினாரா ‘பிக்பாஸ்’ வெற்றியாளர் அசீம்..?  title=

கடந்த பிக்பாஸ் சீசனில் பரபரப்பான போட்டியாளர்களாக கருதப்பட்டவர்கள், அசீம் மற்றும் விக்ரமன். இவர்களுக்கிடையே கடும் போட்டி நிலவியதையடுத்து ரசிகர்கள் அதிகமாக அசீமிற்கு வாக்களித்திருந்ததால், அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சி முடிந்த சில மாதங்கள் கடந்துள்ள நிலையில், இப்போது அந்த போட்டியில் ரன்னர் அப் பட்டத்தை வென்ற விக்ரமன் குறித்த ஒரு செய்தி இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது. 

விக்ரமன் மீது குற்றச்சாட்டு..

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுள் ஒருவராக வலம் வருபவர், விக்மன். அரசியல் விமர்சகராகவும் பத்திரிகையாளராகவும் இருந்த இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு சில மாதங்களுக்கு முன்னர் வி.சி.கவில் இணைந்தார். இந்த நிலையில், நேற்று பெண் வழக்கறிஞர் ஒருவர் விக்ரமன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதற்கான ஆதாரங்களையும் சேகரித்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது பெரும் பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, பிக்பாஸ் வின்னர் அசீம் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். இதுவும் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

மறைமுகமாக தாக்கிய அசீம்..

நடிகர் அசீம், நேற்று தனது சமூக வலைதள பக்கங்களில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். 

கைத்தட்டுவது போல புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் தனது பதிவில், “நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனைகேட்க்கும், நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “என் தத்துவம் ரீச் ஆகும், என்ன கொஞ்சம் லேட்டா ஆகும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவால் விக்ரமனை இவர் மறைமுகமாக தாக்குகிறாரா என்று ரசிகர்கள் சிலர் குழப்பமடைந்துள்ளனர். 

ஏன் இப்படியொரு வன்மம்..? 

நடிகர் அசீம், பிக்பாஸ் இல்லத்தில் இருந்த போது அவர் அதிகம் கோபப்படுவதும் அதிகம் கத்தி பேசுவதும் பல ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து பலமுறை வார்னிங்க் கொடுக்கப்பட்ட பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தன் சுபாவத்தை அவர் மாற்றிக்கொண்டார். நடிகர் அசீம் டைட்டிலை வென்றது, நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் உள்பட பலருக்கு பிடிக்கவில்லை என ரசிகர்கள் மத்தியில் கூறப்பட்டது. “நீ பற்ற வைத்த நெருப்பொன்று..” என அசீம் வெளியிட்டுள்ள இந்த பதிவு தற்போது விக்ரமனின் சர்ச்சை தீயில் எண்ணெயை ஊற்றும் வகையில் அமைந்துள்ளது. சில ரசிகர்கள், “நீ யார்ரா கோமாளி..?” என்றும் ஒரு சிலர் ”உங்களுக்கு ஏன் இப்படியொரு வன்மம்..?” என்றும் கமெண்டடித்து வருகின்றனர். 

பெண் வழக்கறிஞரின் ட்வீட்டுகள்..

விக்ரமன் தன்னை ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியுள்ள பெண் வழக்கறிஞரின் பெயர், கிருபா முனுசாமி. இவர், தற்போது லண்டனில் மேற்படிப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு விக்ரமன் தன்னிடம் பணம் பெற்றதாகவும் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் ஆதாயங்களுக்காக விக்ரமன் தன்னை ஏமாற்றி பணம் வாங்கிக்கொண்டதாகவும் கூறி கிருபா சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். அதில், விக்ரமனுடன் வீடியோ காலில் பேசுவது போன்ற புகைப்படமும், விக்ரமனுடன் தான் பேசிய வாட்ஸ் ஆப் மற்றும் மெசேஜ் உரையாடல்களையும் அவர் பதிவிட்டுள்ளார். விக்ரமன் மிகவும் கொடிய நபராக தன்னிடம் நடந்து கொண்டதாகவும் தன்னுடன் சேர்த்து 15 பால்புதுமையினரை அவர் காதல் என்ற பெயரில் ஏமாற்றியுள்ளதாகவும் அவர் தனது ட்வீட்ஸ்களில் தெரிவித்துள்ளார். இது நேற்று பெரும் பிரச்சனையாக வெடித்தது. 

விக்ரமன் பதில்..!

கிருபா முனுசாமியின் இந்த குற்றச்சாட்டு நேற்று வைரலானதை தொடர்ந்து விக்ரமன் அதற்கு இன்று காலை பதில் தெரிவித்துள்ளார். அதில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார். ஒரு கதைக்கு இரண்டு பக்கங்களும் இருப்பது போல, இந்த கதையில் இரண்டு பக்கங்கள் இருப்பதாக அவர் இது குறித்து வெளியிட்டுள்ள ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன் மீது குற்றம் சுமத்திய கிருபா தனக்காக எழுதிய 4 பக்க காதல் கடிதத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். 

மேலும் படிக்க | மாவீரன் வசூல் நிலவரம்: இத்தனை கோடி கலக்ஷனா? பாக்ஸ் ஆபிஸ் விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News