ஒரே நாளில் சகோதரன்-சகோதரியை மாரடைப்புக்கு பலிகொடுத்த பிரபல நடிகர்..!

Bose Venkat Siblings Death: பிரபல துணை நடிகர் போஸ் வெங்கட், ஒரே நாளில் தன் உடன் பிறந்த இருவரையும் இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Jun 24, 2023, 01:41 PM IST
  • தமிழ் திரையுலகின் பிரபல குணச்சித்திர நடிகர், போஸ் வெங்கட்.
  • ஒரே நாளில் தனது சகோதரன் மற்றும் சகோதரியை இழந்துள்ளார்.
  • இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஒரே நாளில் சகோதரன்-சகோதரியை மாரடைப்புக்கு பலிகொடுத்த பிரபல நடிகர்..! title=

பல தமிழ் படங்களில் துணை கதாப்பாத்திரமாக நடித்து பிரபலமானவர், போஸ் வெங்கட். இவர், தன் உடன் பிறந்த சகோதரன் மற்றும் சகோதரியை ஒரே நாளில் இழந்துள்ளார். இந்த சம்பவம், பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

போஸ் வெங்கட்: 

2003ஆம் ஆண்டு முதல் பல தமிழ் படங்களில் துணை கதாப்பாத்திரமாகவும் குணச்சித்திர கதாப்பாத்திரமாகவும் நடித்து பிரபலமானவர், போஸ் வெங்கட். ஈர நிலம் படம் மூலம் திரையுலகிற்குள் நுழைந்த இவர், பெரும்பாலான பெரிய ஹீரோக்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்தார். குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கவண் திரைப்படத்தில் வில்லன்-அரசியல்வாதி கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்தார். தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் நடித்து பிரபலமானார். இவர், சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராகவும் விளங்குகிறார். இவர் வாழ்க்கையில் நடைப்பெற்றுள்ள ஒரு சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மேலும் படிக்க | தமிழ் சினிமா உலகையே உலுக்கிய அதிர்ச்சி கடத்தல் சம்பவம்!

சகோதரி-சகோதரன் உயிரிழப்பு: 

நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி, சென்னையில் வசித்து வந்தார். இவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சென்னை, எம்எம்கே பகுதியில் உள்ள வளர்மதியின் இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. இவருக்கு இறுதி சடங்கு நடைப்பெற்ற நிலையில், போஸ் வெங்கட்டின் சகோதரர் ரங்கநாதன், அறந்தாங்கியில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். சகோதரியை இழந்த சோகம் தாளாமல் அவர் வளர்மதியின் உடல் மேல் சாய்ந்து அழுதுள்ளார். அப்போது இவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளார். சுற்றி இருந்தவர்கள் செய்வதரியாது திகைத்து கொண்டிருந்த நொடிகளிலேயே ரங்கநாதனும் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இறுதி சடங்கு: 

போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதியின் உடல், நேற்று சென்னையில் அடக்கம் செய்யப்பட்டது. இவருடன் சேர்ந்து உயிரிழந்த அவரது சகோதரர் ரங்கநாதனின் உடல் அறந்தாங்கிக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. இப்படி ஒரே நாளில் இரு உயிர்களை இழந்த போஸ் வெங்கட்டிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களும் பொது மக்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர். 

முதல்வர் இரங்கல்: 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போஸ் வெங்கட்டின் உடன் பிறந்தவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். போஸ் வெங்கட், சினிமாவில் மட்டுமன்றி திமுக கட்சியின் தீவிர தொண்டராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா ஹன்சிகா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News