ஆர்ஆர்ஆர் இயக்குநருடன் இணையும் கமல்ஹாசன்?

இயக்குநர் ராஜமௌலியின் படத்தில் கமல்ஹாசன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : May 17, 2022, 09:12 AM IST
  • ஆர்ஆர்ஆர் இயக்குநருடன் அடுத்த படம்
  • கமல்ஹாசனிடம் ராஜமௌலி பேச்சுவார்த்தை
  • உறுதியானால் விரைவில் அறிவிப்பு
ஆர்ஆர்ஆர் இயக்குநருடன் இணையும் கமல்ஹாசன்?  title=

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாகிறது. பிரம்மாண்டமான ஆடியோ ரிலீஸில் பங்கேற்ற கமல்ஹாசன் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இதற்காக பிரபலமாக இருக்கும் யூ டியூப் சேனல்களில் பிரத்யேகமான நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழில் பிரபலமாக இருக்கும் ‘வில்லேஜ் குக்கிங்’ சேனல் குழுவினருடன் கமல்ஹாசன் ‘விக்ரம்’ படத்துக்காக புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் உலாவுகிறது. 

மேலும் படிக்க | பத்தல பாடலுக்கு நடனமாடிய சிம்பு! வைரலாகும் வீடியோ!

அதேநேரத்தில் விக்ரம் படத்துக்குப் பிறகு அடுத்த யாருடன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. விக்ரம் ஆடியோ ரிலீஸில் பங்கேற்ற இயக்குநர் பா.ரஞ்சித், மதுரையை மையமாகக்கொண்ட கதை ஒன்று தயாராக இருப்பதாகவும், கமல்ஹாசன் ஓகே சொன்னால் இயக்க தயாராக இருப்பதாகவும் விழா மேடையிலேயே அதிரடியாக அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பால் கமல்ஹாசன் அடுத்ததாக பா.ரஞ்சித்துடன் கைகோர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. 

பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் போன்ற மிகப் பிரம்மாண்ட படங்களை இயக்கி ஹிட் கொடுத்த இயக்குநர் ராஜமௌலியின் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய ஹிட்டானது. ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து இந்த ஆண்டு ரிலீஸான திரைப்படங்களில் வசூல் சக்கரவர்த்தியாக சிம்மாசனமிட்டுள்ளது. அந்தப் படத்துக்குப் பிறகு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் சேர்ந்துள்ளார் ராஜமௌலி. 

இருவரின் கூட்டணியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் உருவாகிறது. இந்தப் படத்தில் மிக மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு உலக நாயகன் கமல்ஹாசனிடம் ராஜமௌலி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். ஆனால், கமல் தரப்பில்  இருந்து இன்னும் உறுதி கொடுக்கப்படவில்லையாம். இந்த பேச்சுவார்த்தை இறுதியானால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். 

மேலும் படிக்க | ஏகே 61 ஷூட்டிங் எப்போது நிறைவு... போனிகபூர் வெளியிட்ட அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News