குக் வித் கோமாளி 3 இல் பங்கேற்க்கும் பிரபல மாஸ் நடிகர்

தென்னிந்திய சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் சார்பட்டா பரம்பரை நடித்தவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அறிமுகமாக உள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 11, 2022, 11:50 AM IST
குக் வித் கோமாளி 3 இல் பங்கேற்க்கும் பிரபல மாஸ் நடிகர் title=

திரைப்படங்களை பார்க்க எந்தளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ அதே அளவு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

தற்போது பல சேனல்கலும், பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை போட்டிபோட்டுக்கொண்டு ஒளிபரப்புகின்றன. அதிலும் குறிப்பாக 'குக் வித் கோமாளி' (Cook With Comali) என்கிற சமையல் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. ரக்சன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். 

ALSO READ | இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர்தானா அவுட்

இந்த நிகழ்ச்சியின் சீசன்-1 ஆனது 16 நவம்பர் 2019 அன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் சமையல் போட்டியாளர்களாக ரேகா, உமா ரியாஸ்கான், வனிதா விஜயகுமார், பிரியங்கா ரோபோ சங்கர், ரம்யா பாண்டியன், மோகன் வைத்தியா, தாடி பாலாஜி, கு. ஞானசம்பந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேசமயம் கோமாளிகளாக சிவாங்கி (Sivaangi), புகழ், பிஜிலி ரமேஷ், மணிமேகலை, டைகர் தங்கதுரை, பாலா, சாய் சக்தி, பப்பு ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் பாகத்தில் வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார்.

இந்த நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகமும் தொடங்கப்பட்டது. இரண்டாம் பாகத்தில் சமையல் போட்டியாளர்களாக அஸ்வின் (Ashwin), பவித்ரா, கனி, தீபா, மதுரை முத்து, பாபா பாஸ்கர், தர்ஷா குப்தா, ஷகீலா ஆகியோர் கலந்து கொண்டனர். கோமாளியாக சிவாங்கி, புகழ், சுனிதா, மணிமேகலை, டைகர் தங்கதுரை, சரத், பாலா ஆகியோர் பங்கேற்றனர். இந்த சீசனில் கனி வெற்றி பெற்றார்.

அந்த நிலையில் தற்போது மூன்றாம் சீசனின் ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே ப்ரொமோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது. 

இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சந்தோஷ் பிரதாப் காலந்துக்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடிகர் சந்தோஷ் பிரதாப் வட சென்னையில் நடைபெற்ற குத்துச்சண்டை பின்னணி சம்பவங்களின் தொகுப்பாக சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்துள்ளார். இதில் இவர் நடித்தார் என்று சொல்வதை விட வாழ்ந்து விட்டார் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

தற்போது இவர் பிசாசு 2 என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியாவும் நடித்துக் கொண்டிருக்கின்றனர். பிஸியாக இருக்கும் இவர் தனக்கு மேலும் ரசிகர்களை அதிகரிப்பதற்காக தற்போது சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார் என்ற செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

ALSO READ | குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்கும் தேதி அறிவிப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News